புதிய அமைச்சர்கள்: பைடன் இன்று அறிவிப்பாரா

Updated : நவ 24, 2020 | Added : நவ 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் தனது அமைச்சரவையில் இடம்பெறக் கூடியவர்களில் ஒரு சிலரின் பெயர்களை இன்று வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து 20 நாட்களுக்கு மேலாகியும் ஜோ பைடனின் வெற்றியை ஏற்க குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்து வருகிறார்.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் தனது அமைச்சரவையில் இடம்பெறக் கூடியவர்களில் ஒரு சிலரின் பெயர்களை இன்று வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



latest tamil news




அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து 20 நாட்களுக்கு மேலாகியும் ஜோ பைடனின் வெற்றியை ஏற்க குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்து வருகிறார். தேர்தல் முடிவுகள் குறித்து அவர் பல்வேறு வழக்குகளையும் தொடர்ந்துள்ளார். இந்நிலையில் ஜி.எஸ்.ஏ. எனப்படும் பொது சேவை நிர்வாகம் புதிய அதிபராக ஜோ பைடன் வென்றதாக அறிவிக்க வேண்டும். அதன்பிறகே நிர்வாக மாற்றத்துக்கான நடவடிக்கைகள் துவங்கும். ஆனால் பொது சேவை நிர்வாகம் இதுவரை அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.

இதற்கிடையே தன் அமைச்சரவையில் இடம்பெறக் கூடியவர்களை ஏற்கனவே தீர்மானித்து விட்டதாக பைடன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.வரும் ஜன. 20ல் அதிபராக அவர் பதவியேற்க உள்ளார். அதற்கு முன்னதாக அமைச்சர்களின் பெயர்களை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. முதல்கட்டமாக தன் அமைச்சரவையில் இடம்பெறக் கூடிய சிலரின் பெயர்களை பைடன் இன்று அறிவிப்பார் என பரவலாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக வெளியுறவு அமைச்சர் அல்லது வருவாய் துறை அமைச்சரின் பெயர்களை அவர் வெளியிடலாம்.


latest tamil news




ராணுவத் துறைக்கு முதல் முறையாக ஒரு பெண் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. அதுபோலவே வருவாய் துறை அல்லது 'வெட்ரன்ஸ்' எனப்படும் முன்னாள் ராணுவத்தினர் விவகாரத் துறைக்கும் பெண் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படலாம்.அல்லது ராணுவம் உள்துறை வருவாய் துறைகளில் ஏதாவது ஒன்றில் கருப்பினத்தவர் அமைச்சராக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால் ஜன. 20ல் நடக்க உள்ள பதவியேற்பு விழாவையும் எளிமையாக நடத்த திடமிடப்பட்டுள்ளது.
பி ளின்கெனுக்கு வெளியுறவு : ஜோ பைடனின் நம்பிக்கைக்கு உரிய வெளியுறவு கொள்கை ஆலோசகரான ஆன்டனி பிளின்கென் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒபாமா அதிபராக இருந்த போது வெளியுறவுத் துறை இணை அமைச்சராகவும் ஜோ பைடன் துணை அதிபராக இருந்தபோது அவருடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார் பிளின்கென் 58.

இந்தியா ஆதரவு கொள்கை உடையவர்.ஜோ பைடனின் மற்றொரு முக்கிய ஆலோசகரான ஜேக் சுலைவான் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
24-நவ-202012:12:47 IST Report Abuse
Ramesh Sargam அதிபர் பதவியில் அமரும் முன்னரே ஜோ பைடன் மிகவும் பரபரப்பாக வேலை செய்கிறார், ஆணைகள் வெளியிடுகிறார். இந்த பரபரப்பு பதவியில் அமர்ந்தபின் தொடருமா?? தொடரவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X