புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேசத்தின், வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திரமோடி போட்டியிட்டார். இவருக்கு எதிராக, எல்லை பாதுகாப்பு படையில் இருந்து, பணி நீக்கம் செய்யப்பட்ட வீரர், தேஜ் பகதுார் என்பவர், சமாஜ்வாதி கட்சி சார்பில், வேட்புமனு தாக்கல் செய்தார்.

எல்லை பாதுகாப்பு படையில் இருந்து, இவர் எதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டார் என்பது தொடர்பான ஆவணத்தை, வேட்பு மனுவுடன் இவர் தாக்கல் செய்யாததாக கூறி, இவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அம்மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியே எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE