சென்னை - சென்னையில், 'நிவர்' புயல் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க, மாநகராட்சி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், 'வர்தா' புயல் போல், 'நிவர்' புயலும், பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிகிறது.புயல் தாக்குதலால் ஏற்படும் பாதிப்பை தடுக்க, முன்னெச்சரிக்கை பணிகளை, மாநகராட்சி துவங்கி உள்ளது.பலத்த காற்றடித்தால் விழும் மரங்களை அறுக்க இயந்திரங்கள், தேங்கும் தண்ணீரை வெளியேற்ற 'ஜென்செட்' மோட்டார்கள், கிரேன், ஜே.சி.பி., உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பலத்த மழை பெய்தால், அதிக தண்ணீர் தேங்கும் பகுதிகளில் படகுகள், தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மழையால், பாதிப்புக்கு உள்ளாகும் மக்களை பாதுகாக்க, பள்ளி, சமூக நலக்கூடங்கள் தயார் நிலையில் உள்ளன.அதோடு, மிகவும் பழுதடைந்து, ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளில் வசிப்போரை, வேறு இடங்களில் தங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கடலோர மண்டலங்களில், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE