சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிவார் புயல் : சென்னை, செங்கல்பட்டு சுற்று வட்டாரங்களில் கனமழை

Updated : நவ 24, 2020 | Added : நவ 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: நிவார் புயல் காரணமாக, நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மழை பெய்து வருகிறது.சென்னையில், சைதாபேட்டை, கிண்டி, கோடம்பாக்கம், தாம்பரம், கிண்டி, நுங்கம்பாக்கம், அம்பத்துார், ஆவடி, மீஞ்சூர், திருவொற்றியூர், துரைப்பாக்கம், சேப்பாக்கம், திருவான்மியூர், செம்பரபாக்கம், வண்டலுார், அனகாபுத்துார், அசோக்நகர், நந்தனம், பெருங்களத்தூர்,


சென்னை: நிவார் புயல் காரணமாக, நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மழை பெய்து வருகிறது.latest tamil news
சென்னையில், சைதாபேட்டை, கிண்டி, கோடம்பாக்கம், தாம்பரம், கிண்டி, நுங்கம்பாக்கம், அம்பத்துார், ஆவடி, மீஞ்சூர், திருவொற்றியூர், துரைப்பாக்கம், சேப்பாக்கம், திருவான்மியூர், செம்பரபாக்கம், வண்டலுார், அனகாபுத்துார், அசோக்நகர், நந்தனம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, மேற்கு மாம்பலம் மற்றும் எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தின் சில இடங்களிலும் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை அசோக் நகரில் கனமழையால் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 24 மணிநேரத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


latest tamil news

நெருங்கி வரும் நிவார் புயல்வங்க கடலில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுகிறது. இதன் வேகம் மணிக்கு 15 கி.மீ முதல் 4 ஆக குறைந்தது. சென்னையில் இருந்து 470 கி.மீ தொலைவில் நிவர் புயல் சின்னம் நிலை கொண்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து 440 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னையை நெருங்கி வருகிறது நிவார் புயல்.

சென்னையில் நேற்று பெய்த மழை அளவு, புதுச்சேரியில் இல்லை. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்று லேசான மழை பெய்த நிலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இல்லை. ஆயினும் புயல் சின்னம் காரணமாக புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது.


latest tamil news
நிவார் புயல் காரணமாக தமிழகத்தின் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களுக்கு இடையேயும், உள்ளேயும் மறு உத்தரவு வரும் வரை பஸ்கள் சேவை இயக்கப்படாது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
24-நவ-202015:31:42 IST Report Abuse
Thiagarajan Kodandaraman அணைத்து மழை நீரும் வீணாக போவதற்கு இந்த அரசியல் வியாதிகளின் நில கொள்ளை தான் அப்பாவிகள் பாடு தான் திண்டாட்டம் இடங்களை கொள்ளை அடித்து மாடி மேல் மாடிகள் கட்டி பல நூறு குளங்களை ஆக்கிரமித்த கொடியவர்கள் இரக்கமில்லாத பண பிசாசுகள்
Rate this:
Cancel
24-நவ-202013:35:36 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) நீர் பாசன துறை அமைச்சர் தனியாக நியமனம் செய்யப்பட வேண்டும் , இலவசங்கள் கொடுப்பதை தவிர்த்து ஆறு ஏரி குளங்கள் நன்றாக தூர் வாரப்பட்டு நீர் சேமிக்க வேண்டும் நீர் உயர வரப்பு உயரும். நாடும் உயரும்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
24-நவ-202013:21:45 IST Report Abuse
Ramesh Sargam நான் மீண்டும் மீண்டும் மக்களை கேட்டுக்கொள்வது என்னவென்றால், அரசை முழுவதுமாக எல்லாவற்றிர்க்கும் எதிர்பார்க்காதீர்கள். இப்பொழுதுள்ள அரசு தன்பணியை சிறப்பாக செய்கிறது. முன்னெப்பொழுதும் இல்லாமல், முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொண்டிருக்கிறது. இருந்தாலும், மக்களே, நீங்களும் உங்களை முன்னெச்சரிக்கையாக பாதுகாத்துக் கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு. அனாவசியமாக வெளியில் சுற்றுவதை தவிர்க்கவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X