பொது செய்தி

இந்தியா

பெருநிறுவனங்கள் வங்கி துவங்க அனுமதிப்பது மோசமான யோசனை: ரகுராம் ராஜன்

Updated : நவ 24, 2020 | Added : நவ 24, 2020 | கருத்துகள் (44)
Share
Advertisement
புதுடில்லி: வங்கிகள் துவங்க பெரு நிறுவனங்களை அனுமதிக்கலாம் என ரிசர்வ் வங்கி பரிந்துரைத்திருப்பது மோசமான யோசனை என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்த பின் பெருநிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் வங்கிகள் துவங்க நடவடிக்கை எடுக்கலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
Raghuram Rajan, RBI panel, corporate bank, bad_idea

புதுடில்லி: வங்கிகள் துவங்க பெரு நிறுவனங்களை அனுமதிக்கலாம் என ரிசர்வ் வங்கி பரிந்துரைத்திருப்பது மோசமான யோசனை என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்த பின் பெருநிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் வங்கிகள் துவங்க நடவடிக்கை எடுக்கலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. அவ்வாறு வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டால், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வங்கி சேவையை துவங்க முடியும்.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியதாவது: ஒரு வங்கியில் கடன் பெறுபவர்களே, அதன் உரிமையாளர்களாக இருந்தால், கடன்களை எவ்வாறு நிர்ணயிக்க முடியும். பெரு நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் புதிதாக வங்கிகள் துவங்க அனுமதிக்கலாம் என்று, ரிசர்வ் வங்கி நிபுணர் குழு பரிந்துரை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஒரு மோசமான யோசனை.


latest tamil news



பெரு நிறுவனங்களை, வங்கி துறையில் அனுமதிக்கும் முன், ரிசர்வ் வங்கியின் அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் அவற்றை கட்டுப்படுத்த முடியும். இந்தியாவில் எப்போதாவது தான், வங்கிகள் மோசமான நிலைக்கு செல்லும். தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கும் வரையில் தான், வங்கிகளில் மக்கள் தங்கள் பணத்தை சேமிப்பார்கள்.

பெரு நிறுவனங்கள் வங்கிளை நடத்தினால், வங்கி பணத்தை தங்கள் நிறுவனத்தின் முதலீட்டுக்கு எப்படியாவது கொண்டு செல்வார்கள். பொதுமக்களின் பணத்தை, தங்களுக்காக செலவிடும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
24-நவ-202022:47:50 IST Report Abuse
Vijay D Ratnam இவரு எதுக்கு கிடந்து குதிக்கிறார். புரளி கிளப்பிவிடுவதே இந்தாளுக்கு வேலையா போய்டிச்சி. பெரு நிறுவனங்கள் வங்கி துவங்கட்டும். மக்களுக்கு தொழில் துவங்க கடன் கொடுப்பார்களா. அப்படி கொடுத்தால் நல்லதுதானே. எல்லா பெருநிறுவனங்களும் வங்கி துவங்கட்டும். மக்கள் அந்த வங்கிகளில் முதலீடு செய்ய முன்வரணும்ல. அமெரிக்கா ஐரோப்பாவில் Wallmart, Carrefour, Ikea, Aldi, போன்ற பெரு வணிக நிறுவனங்கள் வங்கி நடத்துவது போல, இங்கும் ஏன் நடத்தக்கூடாது. நடத்தட்டும் குடுமி ரிசர்வ் பேங்க் கிட்ட இருக்கட்டும்.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
24-நவ-202019:38:15 IST Report Abuse
spr பெரு நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் புதிதாக வங்கிகள் துவங்க அனுமதிக்கலாம் என்று, ரிசர்வ் வங்கி நிபுணர் குழு பரிந்துரை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஒரு மோசமான யோசனை.- நூற்றுக்கு நூறு உண்மை அப்படி சில வங்கிகள் (கூட்டுறவு வங்கி உட்பட) மாறியதால்தான் பிரச்சினைகளே துவங்கியது
Rate this:
vidhuran - chennai,இந்தியா
24-நவ-202021:25:50 IST Report Abuse
vidhuran பெரு நிறுவனங்கள் வங்கிகளை தொடங்கினால், வங்கிகளின் முதலீடுகளை தாங்களே எடுத்துக்கொள்வார்கள் என்று கூறும் இவர் அரசியல் வாதிகள் அரசு வங்கிகளை தங்கள் வங்கிகள் போல நடத்தி பல வங்கிகளை காலி செய்ததைப்போல /ஊரான் வீடு நெய்யே என் பொண்டாட்டி கையே என்று எல்லோருக்கும் கடனை கொடுக்க சொல்லி நிர்பந்தித்து நஷ்டம் ஏற்பட்டதை பற்றி என்ன சொல்வார்?எல்லா விதமான தொழில்களிலும் சில ரிஸ்க் இருக்கத்தான் போகிறது. ஒரு விஷயத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே அலாரம் அடிப்பது புரியவில்லை....
Rate this:
Cancel
Prabhagharan - Madurai,ஓமன்
24-நவ-202019:21:37 IST Report Abuse
Prabhagharan இவர் எதிர்க்கிறார் என்றால் அது நாட்டுக்கு நல்லதாக தான் இருக்கும், இவரின் காங்கிரஸ் ஐடியா பப்புகிட்டத்தான் வேகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X