பிரசாந்த் கிஷோரால் புகைச்சல்: திரிணமுலில் எதிர்ப்பு குரல்

Updated : நவ 24, 2020 | Added : நவ 24, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஆளும் திரிணமுல் காங்.,கில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், எம்.எல்.ஏ.,க்கள் சிலர், கட்சிக்கு எதிராக வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. சட்டசபையின், 294 தொகுதிகளுக்கு,
MamataBanerjee, PrashantKishor, WestBengal, Trinamool, TMC, மம்தா, பிரசாந்த் கிஷோர், மேற்குவங்கம், திரிணமுல் காங்கிரஸ்

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஆளும் திரிணமுல் காங்.,கில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், எம்.எல்.ஏ.,க்கள் சிலர், கட்சிக்கு எதிராக வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. சட்டசபையின், 294 தொகுதிகளுக்கு, தமிழகம், அசாம், புதுச்சேரியுடன், அடுத்தாண்டு ஏப்., - மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. தொடர்ந்து, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க, மம்தா பானர்ஜி முனைப்புடன் உள்ளார். கடந்த சில தேர்தல்களாக, பா.ஜ., அங்கு பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.


அதிர்ச்சி


கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், திரிணமுல் காங்.,குக்கு, அதிர்ச்சி அளித்து, அதிக தொகுதிகளில், பா.ஜ., வென்றது. இந்நிலையில், வரும் தேர்தலை சந்திக்க, தமிழகத்தின், தி.மு.க.,வைப் போல, தேர்தல் நிபுணர், பிரசாந்த் கிஷோரின், 'ஐபேக்' நிறுவனத்தின் உதவியை, மம்தா பானர்ஜி நாடியுள்ளார். ஆனால், அந்த நிறுவனத்தின் தலையீடு, குறுக்கீட்டினால், கட்சி மூத்த தலைவர்கள் உட்பட பலர் அதிருப்தி அடைந்து உள்ளனர். பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளை கேட்டு, கட்சி மற்றும் ஆட்சியில் பல மாற்றங்களை மம்தா பானர்ஜி மேற்கொண்டதற்கு, கட்சியில் பரவலாக எதிர்ப்பு உள்ளது.


latest tamil news


மனதுக்குள் புழுங்கி கொண்டிருந்த நிலையில், பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், கட்சி தலைமை அலுவலகத்தில் குவிந்து, ஐபேக்கின் சேவையைப் பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த சூழ்நிலையில், பல முக்கிய மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கட்சிக்கு எதிராக, வெளிப்படையாக எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் குறிப்பிடத்தக்கவர், கட்சியில் மம்தாவுக்கு அடுத்த நிலையில் உள்ள, போக்குவரத்து துறை அமைச்சர், சுவேந்து அதிகாரி, கிழக்கு மிதுனபுரி உட்பட சில மாநிலங்களில், 45 தொகுதிகளின் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கக் கூடியவராக உள்ளார்.


latest tamil news


மேலும், 23 மாவட்டங்களில், 18 மாவட்டங்களில், இவருடைய ஆதரவாளர்களே முக்கிய பதவிகளில் உள்ளனர். பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின்படி, தன் ஆதரவாளர்கள் சிலர் மாற்றப்பட்டதால், இவர் கட்சித் தலைமை மீது அதிருப்தி அடைந்துள்ளார். கடந்த சில மாதங்களாக எதிலும் பட்டும்படாமலும் இருந்து வருகிறார். அதே நேரத்தில், கட்சிக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இவரைப் போல, சில முக்கிய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களும் தற்போது, கட்சிக்கு எதிராக வெளிப்படையாக கருத்து தெரிவிக்கத் துவங்கிஉள்ளனர்.

இவர்களில் பலர், பா.ஜ.,வில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், 'கட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லை' என, மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர். இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளதாவது:
அமைச்சர் சுவேந்து அதிகாரி, பல மாவட்டங்களில் மிகுந்த செல்வாக்கு உள்ளவர். அவரை திரிணமுல் இழந்தால், அவர், பா.ஜ., வில் சேர்ந்தாலும், சேராவிட்டாலும், அக்கட்சிக்கு அது பலமாக அமைந்து விடும். அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. நிர்வாகிகளின் குரலை, கட்சித் தலைமை கேட்காவிட்டால், அடுத்து வரும் நாட்களில், திரிணமுல் காங்., பெரும் இழப்புகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
24-நவ-202023:17:23 IST Report Abuse
Vijay D Ratnam பிரசாந்த் கிஷோர் அமித்ஷாவின் ஸ்லீப்பர் செல் என்ற உண்மை 2021 மே கடைசியில்தான் சுடலைக்கும் மம்முதாவுக்கும் தெரியும். அநேகமாக அமித்ஷா பிரசாத்துக்கு அடுத்த ஆபரேஷனை கேரளாவில் கொடுக்கப்படலாம்.
Rate this:
Cancel
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
24-நவ-202020:11:38 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ எனக்குத் தெரிந்து பி.கே. எதிர்கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு பி.ஜே.பிக்குதான் வேலைபாக்குறாருன்னு நினைக்கிறேன்.
Rate this:
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
24-நவ-202017:14:28 IST Report Abuse
Balasubramanian மேற்கு வங்கம், தமிழகம், இரண்டு மாநிலங்களுக்கும் இந்தி தேவை இல்லை ஆனால் பிரசாந்த் கிஷோர் தேவை அவரிடம் அப்படி என்ன மாயமோ? எல்லாம் பகுத்தறிவாளர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். நாம் நமக்கு தெரிந்த கடவுளை பிரார்த்தனை செய்வோம் இவர்களிடம் இருந்து நாட்டை காக்க வேண்டும் என்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X