பொது செய்தி

தமிழ்நாடு

"தி.மு.க.வும் தான் திருமண மேடைகளை அரசியல் மேடைகள் ஆக்கிவிடுகிறது. அதை பா.ஜ.வினர் யாரும் கண்டித்தனரா..."

Updated : நவ 24, 2020 | Added : நவ 24, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்துக்கு வந்து, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி குறித்து பேசியது, அரசு விழாவில் கலந்து கொண்டதில், தி.மு.க., வுக்கு எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. ஆனால், மக்கள் வரிப்பணத்தில் நடந்த அரசு விழா மேடையையே, அரசியல் மேடையாக மாற்றி எதிர்க்கட்சியினரை வசை பாடியதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது, ஜனநாயக நெறிமுறையை அழிக்கும் செயலாகும்.- தி.மு.க
"தி.மு.க.வும் தான் திருமண மேடைகளை அரசியல் மேடைகள் ஆக்கிவிடுகிறது. அதை பா.ஜ.வினர் யாரும் கண்டித்தனரா..."

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்துக்கு வந்து, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி குறித்து பேசியது, அரசு விழாவில் கலந்து கொண்டதில், தி.மு.க., வுக்கு எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. ஆனால், மக்கள் வரிப்பணத்தில் நடந்த அரசு விழா மேடையையே, அரசியல் மேடையாக மாற்றி எதிர்க்கட்சியினரை வசை பாடியதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது, ஜனநாயக நெறிமுறையை அழிக்கும் செயலாகும்.- தி.மு.க .,பொதுச்செயலர் துரைமுருகன்


'தி.மு.க.,வும் தான், திருமண மேடைகளை, அரசியல் மேடைகளாக மாற்றி விடுகிறது. அதை, பா.ஜ.,வினர் யாரும் கண்டித்தனரா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க .,பொதுச்செயலர் துரைமுருகன் பேட்டி.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்திற்கு, 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, பல்வேறு திட்டங்களை அறிவித்து, துவக்கி வைத்துள்ளார். இது, வரவேற்கத்தக்கது. சென்னை மக்களின் தண்ணீர் பிரச்னைக்கு, தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் வாயிலாக, தீர்வு ஏற்பட்டுள்ளது.- த.மா.கா., தலைவர் வாசன்


'இப்படி பேசினால் தான், பா.ஜ., கூட்டணியில் இருப்பதை உறுதி செய்ய முடியும் என்ற எண்ணத்தில், அறிக்கை வெளியிட்டுள்ளீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை.


தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தின் மருத்துவப் படிப்பு இடங்கள் 1,945. அவற்றை, 3,060 ஆக மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயர்த்தினார். தற்போதைய முதல்வர், 3,650 ஆக அதிகரித்துள்ளார். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லுாரிகளை பெற்றுத் தந்துள்ளார்.- அமைச்சர் உதயகுமார்


'கல்லுாரிகளை பெருக்கிய நீங்கள், தனியார் வசம் உள்ள மருத்துவக் கல்லுாரிகளுக்கு, கட்டணம் நிர்ணயிக்க மறந்து விட்டீர்களே...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேட்டி.


உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னைக்கு வந்து சென்ற பின், பா.ஜ., கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. மத்தியில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. அதனால், அதன் கூட்டணி கட்சிக்கு மக்கள் ஆதரவு நிச்சயம்.- பா.ஜ., மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன்


latest tamil news
'கூட்டணி உறுதியாகி விட்டது உண்மை தான். மக்கள் ஆதரவு கிடைத்து விட்டது என்பதை எப்படி அறிந்தீர்கள்...' என, மடக்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு.பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து விட்டன. மகளிருக்கு போதுமான கல்லுாரிகள் இல்லை என்பன போன்ற பல பிரச்னைகளுக்கு முடிவு காலம் நெருங்கி விட்டது.- உதயநிதி ஸ்டாலின்


'தி.மு.க., ஆட்சியில் நடந்ததை, தமிழக மகளிர் மறந்திருக்க மாட்டார்கள்...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை.


மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, அமித் ஷாவை வரவேற்க, தமிழக முதல்வர், சென்னை விமான நிலையம் சென்றுள்ளார். ஜெ., தமிழகத்தில் முதல்வராக இருந்திருந்தால், இது நடந்திருக்குமா?- எம்.பி., ஜோதிமணி


'ஜெ., இருந்திருந்தால், உங்களைப் போன்றவர்கள் எல்லாம், எம்.பி.,க்கள் ஆகி இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், காங்., பெண் எம்.பி., ஜோதிமணி அறிக்கை.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
24-நவ-202021:48:37 IST Report Abuse
Palanisamy T திமுக வினர் செய்தது தவறு அந்தத் தவறைதான் நாங்களும் செய்தோம் என்றுச் சொல்கின்றார்களா? திமுக வெறும் மாநிலக் கட்சி பாஜக மரியாதைக்குறிய ஆளும் தேசிய கட்சி. அரசு விழாவில் அரசியலை பேசுவது அதுவும் ஒருப் பொறுப்புள்ள அமைச்சர் , அடுத்து பிரதமர்ப் பொறுப்பேற்கும் தகுதியுள்ளவர் இப்படிப் பேசியது தவறுதானே. இப்போதே இப்படியென்றால் நாளை ஒரு வேலை தமிழகத்தில் இவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டால் என்ன நடக்கும்
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
24-நவ-202021:14:22 IST Report Abuse
bal திருமணம், சாவு, தாலி அறுப்பு, ரம்ஜான் பிரியாணி, கிராம சபை இங்கெல்லாம் திமுக என்ன பண்ணுகிறது அரசியல் தவிர.
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
24-நவ-202018:50:27 IST Report Abuse
Raman அப்போ திமுக ஜெயிச்சிடும் போல.. ... ஹி ஹி ஹி .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X