சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று ‛நிவர்' புயலாக மாறியது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று ‛நிவர்' புயலாக மாறியது. இந்நிலையில், சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கி.மீ. தொலைவில் உள்ள நிவர் புயல் 4 கி.மீ. வேகத்தில் இருந்து 5 கி.மீ., ஆக அதிகரித்து நகர்ந்து வருகிறது எனவும், புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மேலும் வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து தமிழக கடலோர பகுதியில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நிவர் புயல், கரையை கடக்கும் வரை கல்பாக்கம் அணு உலை ஊழியர்கள், குடும்பத்தினர் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே நாளை (நவ.,25) புயல் கரையை கடக்க உள்ள நிலையில் கல்பாக்கம் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நிவர் புயல் நெருங்கி வருவதால் கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு ஆபத்து அதிகம் என்பதை குறிக்க 7ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்களை 1077 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மக்கள் 1913 என்ற எண்ணிலும், 044-2538 4530, 044-2538 4540 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம் என அறிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தினர், 04322-222207 என்ற எண்ணிலும்,
கடலூர் மாவட்டத்தினர் 04142-220700, 233933, 221383, 221113 என்ற எண்களிலும்,
தஞ்சாவூர் மாவட்டத்தினர் 9345336838 என்ற எண்ணிலும்
தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE