அவுரங்காபாத்: மஹாராஷ்டிராவில் அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில், பா.ஜ., ஆட்சியமைக்கும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் பாஜ.,வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு வெற்றிப்பெற்ற சிவசேனா, முதல்வர் பதவிக்கான பிரச்னை காரணமாக கூட்டணியை முறித்துக்கொண்டு காங்., மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி நடத்தி வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, முதல்வராக பொறுப்பேற்று கிட்டத்தட்ட ஓராண்டாகிவிட்டது.

இந்நிலையில், அவுரங்காபாத்தில் கட்சி நிர்வாகிகளிடையே, சட்ட மேலவை தேர்தல் தொடர்பாக மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே பேசியதாவது: மஹாராஷ்டிராவில் நமது (பா.ஜ.,) அரசை அமைக்க முடியாது என்ற முடிவுக்கு கட்சித் தொண்டர்கள் வந்துவிட வேண்டாம். அடுத்த 2 அல்லது 3 மாதங்களுக்குள் இந்த மாநிலத்தில் நாம் ஆட்சியமைப்போம். அதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம். தற்போது, இந்த சட்ட மேலவைக்கான தேர்தல் முடிவதற்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE