சென்னை: நிவர் புயலால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இன்று (நவ.,24) மற்றும் நாளை நடைபெறவிருந்த சி.ஏ., தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநில அரசுகள் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிகனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, இன்றும் நாளையும் (நவ. 24, 25) நடைபெறவிருந்த பட்டய கணக்காளர் (சி.ஏ.,) தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பட்டய கணக்காளர்கள் நிறுவனம் தரப்பில் வெளியான அறிக்கையில், சென்னை, கடலூர், காஞ்சிபுரம், காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவள்ளூர், புதுச்சேரி பகுதிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் அதற்கு பதிலாக இந்த பகுதிகளில் வருகிற டிசம்பர் 9 மற்றும் 11ம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு ரத்து செய்யப்பட்ட செய்திகள் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE