தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: மோடி | Dinamalar

பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: மோடி

Updated : நவ 24, 2020 | Added : நவ 24, 2020 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி: கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, மக்கள் விழிப்புடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசுடன் இணைந்து , மாநில அரசுகளும் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில்
கொரோனா, முதல்வர்கள், பிரதமர்மோடி, ஆலோசனை

புதுடில்லி: கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, மக்கள் விழிப்புடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசுடன் இணைந்து , மாநில அரசுகளும் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளநிலையில் கொரோனாவால் கடுமையாக பாதிப்பிற்குள்ளான மஹாராஷ்டிரா, குஜராத், கேரளா, மேற்கு வங்கம், டில்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் , ஹரியானா மாநில முதல்வர்களுடன் இன்று(நவ.24) பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்ட இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.


latest tamil newsஇந்த கூட்டத்தில் பேசிய மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தனது அரசு, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உள்ள சீரம் நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளதாகவும், தடுப்பூசியை உரிய நேரத்தில் விநியோகிக்கவும், தடுப்பூசி திட்டத்தை முறையாக செயல்படுத்த குழு அமைத்துள்ளதாக கூறினார்.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஆக்சிஜன் உற்பத்தியில், மாவட்ட மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் தன்னிறைவு பெற்றதாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். நாடு முழுவதும் 160 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டு முயற்சி காரணமாக, குணமடைவோர் மற்றும் இறப்பு விகிதங்களில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக உள்ளது. கொரோனாவில் இருந்து மீள்வோர் விகிதம் அதிகமாக உள்ளதால், வைரஸ் பலவீனமாகிவிட்டது, எளிதில் குணமடைந்துவிடலாம் என மக்கள் நினைக்கின்றனர். இது அஜாக்கிரதையான செயலாகும். தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, மக்கள் விழிப்புடன் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். பரவல் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் முயற்சியால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீள்வோர் மற்றும் குணமடைவோர் விகிதம் அதிகமாக உள்ளது.


latest tamil news


பாதுகாப்பு தான் நமது முக்கியமான குறிக்கோள். எந்த தடுப்பூசி வந்தாலும், அதன் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படும். கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து மாநில அரசுகளுடன் இணைந்து திட்டம் தயாரிக்கப்படும். குளிர்பதன வசதியுடன் கிடங்குகளை அமைப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து தடுப்பூசி பணிகளையும் இந்திய அரசு கவனித்து வருகிறது. இந்தியாவை சேர்ந்த தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பவர்களுடன் தொடர்பில் உள்ளோம். சர்வதேச நிறுவனங்கள், வெளிநாட்டு அரசுகள், நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X