01. உ.பி.,யில் பிறந்த குழந்தை ஒன்று சாக்கு பையில் அழுத நிலையில் மக்களால் அறியப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
02. புதுடில்லி: ஹரியானா, டில்லி உள்ளிட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை , ஆள்கடத்தலில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் அமித், ரூபந்திரா ஆகியோரை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர்.
03. மஹாராஷ்ட்டிரா: சிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் அலுவலகம், வீடுகளில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர்.
04. பீஹார்: முஷாபர்பூரில் உள்ள மத்திய சிறையில் போலீசார் ரெய்டு நடத்தியதில் கத்தி, கஞ்சா, சிம்கார்டுகள், பறிமுதல் செய்யப்பட்டது.
05. சட்டீஸ்கர்: ராய்ப்பூரில் காரில் கடத்தி 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 21 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார்.
06. கேரளா: கோழிக்கோடு விமான நிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 500 க்கும் மேற்பட்ட கிராம் தங்கம் பறிமுதல்.

07. பா.ஜ., பிரமுகர் தற்கொலைக்கு காரணமானதாக சண்டிகரில் பானிபட் போலீஸ் எஸ்.பி., மணீஷா சவுத்ரி என்பவர் மீது வழக்கு பதிவு செய்ப்பட்டது.
தமிழகத்தின் நிகழ்வு
01. சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் புகழேந்தி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

02. திண்டுக்கல் பைனான்சியர் கொலை வழக்கில் ஒருவர் சரண்.
03. சென்னை செங்குன்றம் பகுதியில் ஒருவரிடம் செல்போன் பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

05. திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் குற்றவாளியை பிடிக்க சென்ற இடத்தில் மனமுடைந்த தாய் சகுந்தலா தீக்குளித்து உயிரிழந்தார். போலீசார் கண்முன்னே நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
06. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிமுக எம்.பி., விஜயகுமார் வீட்டின் முன்பு மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீச்சு நடத்தினர். சிசிடிவி காட்சிகள் உதவியுடன் சம்பந்தப்பட்டவரை தேடும் பணி தீவிரம்.
07. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் எடிசன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குமார், கோபிநாத்(28) ஆகியோர், நீதிமன்ற உத்தரவுப்படி, சேலம் சூரமங்களம் போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்து போட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று (நவ.,24) பிற்பகல், கையெழுத்து போட்டு வந்த கோபிநாத்தை 3 பேர் கும்பல் நடுரோட்டில் வெட்டி கொலை செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த கும்பலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலக நடப்பு
01. போலி ஆவணங்கள் மூலம் ரஷ்யாவில் இருந்து இலங்கை சென்ற 27 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
02. கனடாவில் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த ஒருவர் கைது.

03. லண்டனில் ஒன்றரை வயது குழந்தையை கொன்ற கொடூரன் ஆண்ட்ருயூலாய்டு சிறையில் மர்ம முறையில் மரணம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE