சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்த தென் மாவட்டங்கள் செல்லும் அனைத்து ரயில்களும் நாளை(நவ.,25) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இரு மார்க்கங்களிலும் ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது.
பஸ் சேவை ரத்து
வங்கக்கடலில் உருவான ‛நிவர் புயல்' புதுச்சேரி அருகே நாளை மாலை கரையை கடக்க உள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இடையிலும், மாவட்டங்களுக்கு உள்ளேயும், இன்று பகல் 1:00 மணி முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த மாவட்டங்களில் பஸ் போக்குவரத்தை நிறுத்தி வைக்க முதல்வர் பழனிசாமி நேற்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த 7 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி முதல் ஆம்னி பஸ் சேவையை நிறுத்தி வைக்கப்படும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது. அரசின் மறு உத்தரவு வரும் வரை பஸ் சேவை நிறுத்தி வைக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.
ரயில்கள் ரத்து
இந்நிலையில், நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்த தென் மாவட்டங்கள் செல்லும் அனைத்து ரயில்களும் நாளை ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இரு மார்க்கங்களிலும் ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்கள் செல்லும் 24 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், முன்பதிவு செய்த பயணிகளுக்கான கட்டணத்தொகை திருப்பி செலுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனிடையே, அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்கு மட்டும் இயக்கப்பட்டு வந்த சென்னை புறநகர் ரயில் சேவை நாளை காலை 10 மணி முதல் நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE