டாக்கா: ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன்னரும் பயங்கரவாத எதிர்ப்பு பிரசாரம் செய்யுமாறு மசூதி அதிகாரிகளுக்கு வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
அண்டை நாடான வங்கதேசம், பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக வங்கதேச மத விவகாரங்களுக்கான அமைச்சகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இமாம்களுக்கான அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பயங்கரவாதம் உலகளாவிய சவாலாக உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்து மத மக்களின் பிம்பத்தையும் புண்படுத்துகின்றன. குரான் கூற்றுக்களின் அடிப்படையில் பயங்கரவாதத்திற்கும் வன்முறைக்கும் எதிரான இந்த அறிக்கையை பிரபலப்படுத்த வேண்டும். குரானின் சரியான விளக்கத்தை பரப்ப வேண்டும்.

உள்ளூர் அதிகாரிகள், இஸ்லாமிய அறக்கட்டளை துறையினர் இதற்காக மாவட்ட அளவில் கூட்டங்களை நடத்த வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான சமூக விழிப்புணர்வை அதிகரிக்க அனைத்து பிரிவுகளின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும். பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தவும் ஒழிக்கவும் அனைத்து தரப்பு மக்களின் ஒத்துழைப்பும் தேவை. இவ்வாறு கூறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE