ஹாங்காங்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து பல நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது ஹாங்காங்கில் அத்தியாவசிய அங்காடிகளை தவிர நைட் கிளப்புகள், பார்கள் உள்ளிட்டவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. டிசம்பர் 2 வரை நைட் கிளப்புகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் நைட் கிளப்களில் சமூக விலகலை பின்பற்ற முடியாது. கூட்டம் நிரம்பி வழியும் நேரத்தில் கிளப்புகள் மூலமாக கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இதுகுறித்து ஹாங்காங் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் சோபியா சான் கூறுகையில், ‛தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த ஆண்டின் பொருளாதாரக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க கடைகள் திறக்கப்பட்டு பொதுமக்கள் பொருட்களையும் சேவைகளையும் பயன்படுத்த வேண்டும். ஆனால் சேவை நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்,' என்று தெரிவித்துள்ளார்.

இன்று ஹாங்காங்கில் புதிதாக 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 7ம் தேதிமுதல் ஹாங்காங்கில் படிப்படியாக கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தங்கள் நாட்டில் துவங்கிவிட்டது என்று குடிமக்கள் அச்சப்படுகின்றனர். இரண்டாவது அலை ஏற்பட்டாலும் அதிலிருந்து தங்கள் குடிமக்களைப் பாதுகாக்க அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என சோபியா தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE