பொது செய்தி

தமிழ்நாடு

நிவர் புயல்: மீட்பு பணியில் ஈடுபட இந்திய கடற்படை வீரர்கள் தயார்

Updated : நவ 24, 2020 | Added : நவ 24, 2020
Share
Advertisement
சென்னை: வங்கக்கடலில் உருவான நிவர் புயல், நாளை மாலை அதிதீவிர புயலாக மாறி, புதுச்சேரி அருகே கரையை கடக்கும் நிலையில், சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட 5 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட 5 வெள்ள மீட்பு குழுவினர் மற்றும் நீச்சல் குழுவினர் தயார்
Nivar, chennairain, இந்திய கடற்படை,

சென்னை: வங்கக்கடலில் உருவான நிவர் புயல், நாளை மாலை அதிதீவிர புயலாக மாறி, புதுச்சேரி அருகே கரையை கடக்கும் நிலையில், சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட 5 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட 5 வெள்ள மீட்பு குழுவினர் மற்றும் நீச்சல் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். நாகப்பட்டினம், ராமேஸ்வரம் கடற்படை தளம் மற்றும் ஐஎன்எஸ் பருந்து விமானப்படை தளத்திலும் தலா ஒரு குழு தயார் நிலையில் உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல்பகுதியில், மீட்பு மற்றும் நீச்சல் குழுவினருடன் ஐஎன்எஸ் ஜோதி நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



தேசிய பேரிடர் குழுவினர் தயார்

தமிழகத்தில் மீட்பு பணியில் ஈடுபட 12 தேசிய பேரிடர் குழுவினரும், புதுச்சேரி, 2 காரைக்காலில் 1, நெல்லூரில் 3, சித்தூரில் ஒரு குழுவினர் தயார்நிலையில் உள்ளனர். திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்கள் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை , கடலூர், மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். கூடுதல் தேவைக்கு 6 குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X