சென்னை: சென்னையில் கனமழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள, ‛நிவர்' புயல், தமிழக கடலோர மாவட்டங்களை சூழ்ந்தபடி, அதி தீவிர புயலாக நாளை மாலை கரையை கடக்கும் என இன்று கூறப்பட்டுள்ளது.. இதனால், தமிழகம் முழுதும் புயல்எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டு, அரசும், அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர்.
தற்போது 'நிவர்' புயல் சென்னையிலிருந்து 420 கி.மீ.தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 380 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. நிவர் புயலை தொடர்ந்து நேற்று இரவு முதலே சென்னை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யதுவங்கியுள்ளது.

தொடர் மழை காரணமாக இன்று சென்னையில் எழும்பூர், வேப்பேரி, பூவிருந்தவல்லி, கிண்டி, உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன போ்க்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் முன்னேறி செல்ல முடியாமல் திணறி வருகின்றன.
மீட்பு பணிகளுக்காக பேரிடர் குழுவினர் தயார்நிலையில் உள்ளனர். நிவர் புயல் எச்சரிக்கையையடுத்து புதுச்சேரி கடற்கரை மூடப்பட்டது. பொதுமக்களை காவல்துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE