பொது செய்தி

தமிழ்நாடு

புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன?

Updated : நவ 24, 2020 | Added : நவ 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
1ம் எண் எச்சரிக்கை கூண்டு புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது. பலமான காற்று வீசுகிறது. ஆனால் துறைமுகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அர்த்தம்.2ம் எண் எச்சரிக்கை கூண்டு புயல் உருவாகியுள்ளது என்பதை அறிவிப்பதிற்காக ஏற்றப்படுவது தான் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு. இதனைத் தொடர்ந்து துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வெளியேற்ற


1ம் எண் எச்சரிக்கை கூண்டு


புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது. பலமான காற்று வீசுகிறது. ஆனால் துறைமுகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அர்த்தம்.



latest tamil news




2ம் எண் எச்சரிக்கை கூண்டு



புயல் உருவாகியுள்ளது என்பதை அறிவிப்பதிற்காக ஏற்றப்படுவது தான் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு. இதனைத் தொடர்ந்து துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வெளியேற்ற வேண்டும் என்பதை தெரிவிக்க ஏற்றப்படுகிறது.


3ம் எண் எச்சரிக்கை கூண்டு



திடீர் காற்று மற்றும் மழை உருவாகக் கூடிய சூழல் நிலவுகையில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும்.


4ஆம் எண் எச்சரிக்கை கூண்டு



துறைமுகத்தில் மோசமான வானிலை ஏற்பட்டிருந்தால் அதனை அறிவிக்கும் வகையில் 4ம் எச்சரிக்கை எண் விடப்படும். துறைமுகத்தில் இருக்கும் கப்பல்களுக்கு ஆபத்து என்பதை தெரியப்படுத்த இது உதவும்.


5ம் எண் எச்சரிக்கை கூண்டு :



உருவான புயல் துறை முகத்தின் இடது பக்கமாக கரையைக் கடக்கும் என்பதை எச்சரிக்கை செய்ய இந்த கூண்டு ஏற்றப்படுவது வழக்கம்.


latest tamil news





6ம் எண் எச்சரிக்கை கூண்டு :



துறை முகத்தின் வலது பக்கமாக கரையைக் கடக்கும் என்பதை தெரிவிக்க இந்த கூண்டு ஏற்றப்படுகிறது.


7ம் எண் எச்சரிக்கை கூண்டு



இந்த கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகங்கள் வழியாகவோ அல்லது அதற்கு மிக அருகிலோ புயல் கரையைக் கடக்கும் என்பதை அறிவிக்க ஏற்றப்படுகிறது.


8ம் எண் எச்சரிக்கை கூண்டு:



8ம் எண புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் அபாயம் மிக்க புயல் துறைமுகத்தின் இடது பக்கமாக கரையைக் கடக்கும் என்று அர்த்தம்


9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு :



இந்த எண் அறிவிக்கப்பட்டால் அபாயம் மிக்க புயல் துறைமுகத்தின் வலது பக்கமாக கரையைக் கடக்கும் என்று அர்த்தம்


10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு :



அதி தீவிர புயல் உருவாகியிருக்கும் பட்சத்தில் இந்த எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும். துறைமுகத்தின் வழியாகவோ அதன் அருகிலோ இது கரையைக் கடக்கும் என்பதை வெளிப்படுத்த இது உதவும்.


11ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு :



வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் முற்றிலுமாகத் துண்டிக்கப்படும் நிலையில் இந்த புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவது வழக்கம்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chidambaram kanagasabai - Chennai,இந்தியா
25-நவ-202007:02:54 IST Report Abuse
chidambaram kanagasabai எந்தெந்த எண்ணுக்குரிய எச்சரிக்கை கூண்டு எப்படி எப்படி இருக்கும் என்பதையும் போட்டிருந்தால் மிகவும் பயனுடையதாக இருந்திருக்கும்.
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
24-நவ-202021:54:14 IST Report Abuse
THINAKAREN KARAMANI 1ம் எண் முதல் 11ம் எண் வரையிலான எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவதற்கு என்ன அர்த்தம் என்று இப்போதுதான் புரிகிறது. 1ம் எண் முதல் 11ம் எண் வரையிலான எச்சரிக்கைக் கூண்டு ஒவ்வொன்றும் எப்படியிருக்கும் என்று அதற்கான படங்களையும் தனித்த்னியாக வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X