அதிநவீன போர் விமானங்களை இந்திய எல்லையில் பறக்கவிட சீனா திட்டம்

Updated : நவ 24, 2020 | Added : நவ 24, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
சீனாவுக்கும் இந்தியாவுக்குமான எல்லைப் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லடாக்கை கைப்பற்ற சீனா அவ்வப்போது எல்லையில் அத்துமீறி வருகிறது. உலகின் மிகவும் பதற்றமான இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் ஒன்றான சீன-இந்திய எல்லை (எல்ஏசி) தற்போது சீனாவில் கண்காணிக்கப்படுகிறது. முன்னதாக சீனா சிறிய டிரோன்கள் மூலமாக இந்தியாவை அவ்வப்போது எல்லையில் கண்காணித்து

சீனாவுக்கும் இந்தியாவுக்குமான எல்லைப் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லடாக்கை கைப்பற்ற சீனா அவ்வப்போது எல்லையில் அத்துமீறி வருகிறது. உலகின் மிகவும் பதற்றமான இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் ஒன்றான சீன-இந்திய எல்லை (எல்ஏசி) தற்போது சீனாவில் கண்காணிக்கப்படுகிறது.



latest tamil news



முன்னதாக சீனா சிறிய டிரோன்கள் மூலமாக இந்தியாவை அவ்வப்போது எல்லையில் கண்காணித்து வந்தது. தற்போது அதிநவீன ஆயுதங்கள் பொருந்திய போர் விமானங்களை இந்த எல்லையில் பறக்க விடுகிறது. தாங்கள் போர் விமானங்களை லடாக் எல்லைப் பகுதியில் பறக்க விடுவதாக சீனா தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


latest tamil news



இது இரு நாடுகள் இடையே மேலும் பகையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் வான் எல்லையில் அடிக்கடி சீனா அத்துமீறி வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது சிறிய ரக விமானங்கள் மட்டுமல்லாமல் அதிக தொழில்நுட்பங்கள் கொண்ட பெரிய ஃபைட்டர் ஜெட்டுகளை வான்வெளியில் பறக்க விடுகிறது.

சீனாவின் பாதுகாப்புக்காக தாங்கள் எல்லைப்பகுதியில் இவ்வாறு செய்வதாக சீனா இதனை நியாயப்படுத்தி வருகிறது. இதற்கு இந்திய சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
25-நவ-202015:36:10 IST Report Abuse
mathimandhiri அவனுக்கு கிடைக்கும் துணிவு இங்குள்ள உண்டி குலுக்கி, எம் ஓ யு கட்சி தேச விரோதிகள் மற்றும் பாக் கூஜா தூக்கும் மூர்க்கர்கள் இவர்களிடமிருந்து தான். இங்கே இந்த கும்பலைத் தான் முதலில் ஒடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
25-நவ-202010:29:25 IST Report Abuse
Anand சீனாக்காரன் அடிவாங்கிய தீருவேன் என கங்கணம் கட்டி அலைகிறான்..
Rate this:
Cancel
ganesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-நவ-202010:18:01 IST Report Abuse
ganesh China all war flights lab tested one, whereas Indian flights all war flights war tested one.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X