சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

தொண்டருக்கு வரவேற்பு!

Added : நவ 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
தொண்டருக்கு வரவேற்பு!பா.ஜ.,வில், பிரதமர் மோடிக்கு அடுத்தப்படியாக, பிரசாரப் பீரங்கியாக உருவெடுத்துள்ளார், உத்தர பிரதேச மாநில முதல்வரும், அந்தக் கட்சியின் முக்கிய தலைவருமான யோகி ஆதித்யநாத். தேர்தல் பிரசாரங்களில், பா.ஜ.,வில் பிரதமர் மோடிக்கு தான் அதிக கூட்டம் கூடும். அமித் ஷா, நட்டா, ரவிசங்கர் பிரசாத் போன்ற முக்கியத் தலைவர்கள் இருந்தாலும், அவர்களுக்கு, மோடி அளவுக்கு

அக்கம் பக்கம்

தொண்டருக்கு வரவேற்பு!

பா.ஜ.,வில், பிரதமர் மோடிக்கு அடுத்தப்படியாக, பிரசாரப் பீரங்கியாக உருவெடுத்துள்ளார், உத்தர பிரதேச மாநில முதல்வரும், அந்தக் கட்சியின் முக்கிய தலைவருமான யோகி ஆதித்யநாத். தேர்தல் பிரசாரங்களில், பா.ஜ.,வில் பிரதமர் மோடிக்கு தான் அதிக கூட்டம் கூடும். அமித் ஷா, நட்டா, ரவிசங்கர் பிரசாத் போன்ற முக்கியத் தலைவர்கள் இருந்தாலும், அவர்களுக்கு, மோடி அளவுக்கு கூட்டம் கூடுவது இல்லை.பீஹார் சட்டசபை தேர்தலுக்குப் பின், மோடிக்கு அடுத்த இடத்தை, யோகி ஆதித்யநாத் பிடித்துள்ளார். பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியிட்ட, 75 தொகுதிகளில், ஆதித்யநாத் பிரசாரம் செய்தார். இவற்றில், 18 பொதுக் கூட்டங்களும் அடக்கம். ஆதித்யநாத் பிரசாரம் செய்த இடங்களில், அவரது பேச்சைக் கேட்க, ஏராளமான மக்கள் கூடினர். அவர் பிரசாரம் செய்த, 75 தொகுதிகளில், 50ல், பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றிக்கொடி நாட்டினர். இது, பா.ஜ., மேலிடத்துக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் சில மாதங்களில், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ளன. இங்கு, யோகி ஆதித்யநாத்தை பிரசாரத்துக்கு அனுப்பும்படி, இந்த மாநிலங்களைச் சேர்ந்த கட்சி பிரமுகர்கள், மேலிட தலைவர்களுக்கு இப்போதே கடிதம் எழுதி வருகின்றனர். ஆதித்யநாத்தோ, 'கட்சியில், நான் சாதாரண தொண்டர். மேலிடம் கட்டளையிட்டால், எங்கு வேண்டுமானாலும் பிரசாரம் செய்ய தயார்' என, அடக்கத்துடன் கூறுகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
25-நவ-202016:29:44 IST Report Abuse
Dr. Suriya இது என்ன பெரிய விஷயம் ... இங்க சின்ன சொடலை வரவை அவரின் பேச்சை பார்த்து அவரை ஹீரோ லெவெலுக்கு பேசுகிறார்கள் .... ஆனால் அந்த சில்வண்டோ முதல்வர்களை எவ்வளவு தன்னடக்கத்துடன் தருதலைன்னு சொல்லுது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X