சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : நவ 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
தி.மு.க., இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின்: என்ன அடிப்படையில் என்னை கைது செய்கிறீர்கள் என கேட்டேன். இது நாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி இல்லை. மீனவர்கள் அழைத்ததால் தான் வந்தேன்; மைக் பிடித்து பேச கூட இல்லை எனக் கூறினேன். அதற்கு, நீங்கள் எங்கு சென்றாலும் கூட்டம் சேர்கிறது என்பதால் போக முடியாது என்றனர். துாண்டிவிடுபவர், முதல்வர் இ.பி.எஸ்., தான். அதை செய்பவர் சிறப்பு

'டவுட்' தனபாலு

தி.மு.க., இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின்: என்ன அடிப்படையில் என்னை கைது செய்கிறீர்கள் என கேட்டேன். இது நாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி இல்லை. மீனவர்கள் அழைத்ததால் தான் வந்தேன்; மைக் பிடித்து பேச கூட இல்லை எனக் கூறினேன். அதற்கு, நீங்கள் எங்கு சென்றாலும் கூட்டம் சேர்கிறது என்பதால் போக முடியாது என்றனர். துாண்டிவிடுபவர், முதல்வர் இ.பி.எஸ்., தான். அதை செய்பவர் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஸ்தாஸ். அவரது பெயரை எல்லாம் நாங்கள் ஞாபகம் வைத்திருப்போம். இன்னும் அஞ்சு மாசம் தான் இருக்கு. எங்களுக்கு தெரியாத காவல் துறையா, நாங்கள் பார்க்காத காவல் துறையா?

'டவுட்' தனபாலு: சமூக வலைதளங்களும், ஊடகங்களும் பலமாக இருக்கும் இந்தக் காலத்திலேயே, வெளிப்படையாக இப்படி போலீஸ் அதிகாரியை, தி.மு.க.,வின் அடுத்த வாரிசு மிரட்டுகிறாரே... அந்தக் காலத்தில், அதாவது கருணாநிதி காலத்தில், எப்படி எல்லாம், கட்சித் தலைவர்கள் இருந்திருப்பரோ என்ற, 'டவுட்' அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது!


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
தமிழகத்தில், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, அரசுக்கு பல முறை கடிதம் எழுதினோம். ஆனால், எந்த பதிலும் வரவில்லை. இதற்கு காரணம், வன்னியர்கள் குடிக்கும் ஜாதியாகவும், மற்றவர்களுக்கு உழைக்கும் ஜாதியாகவும் நீடிக்க வேண்டும் என, விரும்புகின்றனர். மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்கிறோம். கடந்த, 40 ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையை முன் வைத்து வருகிறோம்.

'டவுட்' தனபாலு: கடந்த, 40 ஆண்டுகளாக கிடைக்காத சலுகை, இப்போது கிடைத்து விடும் என, எப்படி நம்புகிறீர்களோ என்ற, 'டவுட்'டுக்கு முதலில் பதில் சொல்லுங்க. அப்புறம், அரசியல் கட்சியாக இருந்தபடி, குறிப்பிட்ட ஜாதிக்காக போராடுவது போல, தேர்தல் நேரத்தில் அறிக்கை அளிப்பது, இந்த காலக்கட்டத்தில் சரிதானா என்ற கேள்வியும் நடுநிலையாளர்களுக்கு எழுகிறது. அதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்?!


தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்ட தீர்மானம்:
தேர்தல் பிரசாரத்தில், இளைஞரணிச் செயலர் உதயநிதி உள்ளிட்ட நிர்வாகிகளை தொடர்ந்து ஈடுபடவிடாமல் தடுக்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக, தொடர்ந்து கைது செய்து, நீண்ட நேரம், இரவு வரை வைத்திருக்கும் போலீஸ் துறையின் போக்கு கண்டிக்கத்தக்கது. எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை உடைத்தெறிந்து, தேர்தல் பிரசார பயணம், பொதுமக்கள் ஆதரவுடன் தொடரும்.

'டவுட்' தனபாலு: தி.மு.க., இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் தான், 'முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள்...' என, கடந்த சில வாரங்களாகவே சவால் விட்டு வந்தார். ஒரு நாள் பிடித்து, சில மணி நேரம் வைத்ததற்கே, இப்படி தீர்மானம் நிறைவேற்றுகிறீர்களே... அவரை, 15 நாட்கள் 'ரிமாண்டில்' வைத்தால், என்னவெல்லாம் செய்வீர்களோ என்ற, பயங்கர, 'டவுட்' வந்து வந்து போகுது!

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
25-நவ-202021:44:29 IST Report Abuse
Anantharaman Srinivasan உதயாநிதி ஸ்டாலினை 15 ரிமாண்ட் செய்தால் வெளியில் விடும்வரை புலம்புவார்கள்..
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
25-நவ-202019:04:05 IST Report Abuse
C.SRIRAM அழைத்தார்களாம் .. வந்தாராம் .. . தம்பட்டத்துக்கும் ஒரு அளவு இல்லை ? (கூட்டம் சேர்கிறதாம் . நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கபோகிறது ).
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
25-நவ-202016:35:52 IST Report Abuse
Dr. Suriya . உங்கள் இனத்தவரை குடிக்காதீர்கள் என்று போராட வேண்டுமே தவிர குடிக்கும் அவர்களுக்கு இருப்பது சதவீதம் வேண்டும் என்பது தேர்தலுக்கான ஸ்டேண்டே .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X