சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

காங்.,குக்கு இருக்கிறதா தன்மானம்?

Added : நவ 24, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
காங்.,குக்கு இருக்கிறதா தன்மானம்?ஆர்.சுப்பிரமணியம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மேடையில், அநாகரிகமாக பேசுவதில், தி.மு.க.,வினரை, வேறு எந்தக் கட்சியினராலும் வெற்றி கொள்ள முடியாது.தி.மு.க.,வினரின் பேச்சை, 'அநாகரிகம்' என்பதை விட, 'தரம் தாழ்ந்த' என்று குறிப்பிடுவதே, சரியாக இருக்கும்.'நாம், யாரை விமர்சிக்கிறோம்; நம் தகுதி, தராதரம் என்ன?' போன்ற எது

காங்.,குக்கு இருக்கிறதா தன்மானம்?

ஆர்.சுப்பிரமணியம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மேடையில், அநாகரிகமாக பேசுவதில், தி.மு.க.,வினரை, வேறு எந்தக் கட்சியினராலும் வெற்றி கொள்ள முடியாது.தி.மு.க.,வினரின் பேச்சை, 'அநாகரிகம்' என்பதை விட, 'தரம் தாழ்ந்த' என்று குறிப்பிடுவதே, சரியாக இருக்கும்.'நாம், யாரை விமர்சிக்கிறோம்; நம் தகுதி, தராதரம் என்ன?' போன்ற எது குறித்தும், தி.மு.க.,வினர் கிஞ்சித்தும் சிந்திக்க மாட்டார்கள்.காங்கிரஸ் தலைவர்களான ஜவஹர்லால் நேரு, அவரது மகள் இந்திரா, ராஜிவ், சோனியா என, அவர்கள் வம்சத்தை, தி.மு.க.,வினர் போல, வேறு யாரும் தரம் தாழ்ந்து, அநாகரிகமாக பேசியதே இல்லை. எவ்வளவு கேவலப்படுத்தினாலும், தி.மு.க., உடன் கூட்டணி வைக்கும், காங்கிரசாரின், 'தன்மானத்தை' பாராட்டாமல் இருக்க முடியாது.'அவள் ஒன்றும், படிதாண்டா பத்தினியுமல்ல; நான் ஒன்றும், முற்றும் துறந்த முனிவனுமல்ல' என்பது, ஒரு நடிகையை குறித்து, தி.மு.க.,வை தோற்றுவித்த அண்ணாதுரை பேசிய விமர்சனம். தலைவன் எவ்வழியோ, தொண்டனும் அவ்வழியே!நாக்கில் நரம்பில்லாமல், நடிகையை தரங்கெட்டு விமர்சித்தோர், காங்கிரசின் தலைவியை விமர்சித்த விதம் கேட்டால், கொதித்து எழுவீர்.கடந்த, 1979 அக்டோபரில், மதுரையில், முன்னாள் பிரதமர் இந்திரா பங்கேற்ற பொதுக் கூட்டத்திற்கு, பழ.நெடுமாறன் ஏற்பாடு செய்திருக்கிறார்.அவசர நிலை அறிவித்து, ஆட்சியைக் கலைத்த, இந்திராவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி காட்ட, தி.மு.க.,வினர் திட்டமிட்டிருந்தனர்.தி.மு.க.,வின் போராட்டம் என்றால், அதில் அசம்பாவிதம் நடக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம். கொடிகளே, குண்டாந்தடிகளாகும்; பேன்ட் பாக்கெட்டுகளில், கணிசமான அளவில் கற்கள் நிறைந்திருக்கும்.'கருப்புக் கொடி காட்டுகிறோம்' என்ற, தி.மு.க.,வினர், இந்திராவின் மீது கல் வீசி தாக்கினர்; இதனால், அவர் நெற்றியில் காயம் பட்டு, ரத்தம் வழிந்தது.கல் வீச்சு குறித்து, காங்கிரசார், தி.மு.க.,வினரை கடுமையாக விமர்சனம் செய்தனர். பதிலுக்கு, 'இந்திராவிற்கு, மாத விடாயாக இருக்கும்; அதனால் வந்த ரத்தம் போலிருக்கிறது' என, விஷத்தை கக்கினார், கருணாநிதி.
நம் நாட்டின் பிரதமராக, ஒரு மாபெரும் அரசியல் கட்சி தலைவராக இருந்த பெண்மணியை பார்த்து செய்யும் விமர்சனமா இது?கருணாநிதியின் குடும்பப் பெண்கள் குறித்து, காங்கிரசார் அநாகரிகமாக பேச மாட்டார்கள் என்ற தைரியம் அவருக்கு!இவ்வளவு கேவலமாக, அநாகரிகமாக, தரம் தாழ்ந்த, ஓர் அரசியல் கட்சித் தலைவரின் வாரிசைத் தான், 'முதல்வர் ஆக்கியே தீருவோம்' என, 'தன்மானம்' மிக்க, காங்கிரசார் இன்று குரல் கொடுக்கின்றனர்.பதவிக்காக, தி.மு.க.,வினரிடம் நெடுஞ்சாண் கிடையாக விழுந்துக் கிடக்கும் காங்கிரசாரின், 'கொள்கை'யை என்னவென்று சொல்வது?பதவிக்காக பல் இளிக்கும் அரசியல் கட்சிகளுக்கு தான் வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவும் கிடையாது; ஆனால், அவை நமக்கு இருக்கின்றனவே!

100 சதவீதம் எட்டுவோம் ஒரு நாள்!

ஜெ.ரோஜா, அரசுப்பள்ளி ஆசிரியை, திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தின் முதன்மையான மருத்துவக் கல்லுாரிகளில் படிக்கும் கனவு நனவானதால், அரசு பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் அடைந்த அளவில்லா ஆனந்தத்தை, வார்த்தைகளால் சொல்லி மாளாது; இது ஒரு மறக்க முடியாத நிகழ்வு!இந்தக் கல்வியாண்டு முதல், மருத்துவப்படிப்பில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேருவதற்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க, அரசால் சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளது. மொத்தம், 405 இடங்கள், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு
செய்யப்படுகின்றன.பணம் பண்ணும் நோக்கில் புற்றீசல் போல முளைத்து, கோழிப்பண்ணை போல் செயல்படும் தனியார் பள்ளிகளிடம், தற்போது ஒரு வித கலக்கத்தை பார்க்க முடிகிறது. பணத்தால், கல்வியை விலை பேசக் கூடாது.இன்று, 405 இடங்களைப் பெற்றுள்ள அரசு பள்ளி மாணவர்கள், ஒரு நாள், 100 சதவீத இடங்களையும் நிரப்பத் தான் போகின்றனர்; அன்று, இந்தத் தனியார் பள்ளிகள், தங்களுக்கென உள்ஒதுக்கீடு கேட்டு போராடக்கூடிய நிலை வரலாம்.மருத்துவப் படிப்பைப் போன்று, அனைத்துக் துறைகளிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் தர
வேண்டும். அப்போது தான், கடைக்கோடியில் உள்ள ஏழை மாணவனும், வாழ்வில் உயர முடியும்.தமிழ் வழிக் கல்வியில் பயின்றோருக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவது போல், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கும், உள்ஒதுக்கீடு வழங்கினால், ஏழைகளும் அரசு வேலை பெற முடியும். அரசு பள்ளிகளின் தரமும் உயரும்!

அப்புறம் என்னத்துக்கு ஏற்பாடு?

ஏ.எஸ்.நெல்லையப்பன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஹிந்து என்றால், திருடன்' எனச் சொன்னவர், தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி. அதைக் கேட்ட பின்னும், ஹிந்து மக்கள், அவருக்கு ஒட்டுப் போட்டனர்.அவரது மகனும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், ஹிந்து திருமண முறையை கேலி செய்தார். ஸ்ரீரங்கம் கோவிலிலும், முத்துராமலிங்கம் குருபூஜை விழாவிலும் பங்கேற்றவருக்கு வழங்கப்பட்ட திருநீறை கீழே கொட்டி, அவமதித்தார். நாம், அவருக்கும் ஒட்டுப் போட்டு,
சட்டசபைக்கு அனுப்பினோம்!தற்போது, கருணாநிதியின் பேரனான உதயநிதியும், ஹிந்துக்களை அவமானப்படுத்துகிறார். தி.மு.க., இளைஞர் அணி செயலரான உதயநிதி, திருச்சிக்கு சென்றபோது, கோவில் சார்பில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதையை, அவர் நிராகரித்திருக்கிறார். தன் நெற்றியில் விபூதி, குங்குமம் வைக்கவும், அவர் அனுமதிக்கவில்லை.இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ஏற்பாடு செய்தது, தி.மு.க.,வினர் தான்.தி.மு.க., தலைவர்களுக்கு ஹிந்து மதம் பிடிக்கவில்லை என்றால்,
அப்புறம் என்னத்துக்கு அந்த ஏற்பாடு செய்ய வேண்டும்? கோவிலுக்கும், குருபூஜை விழாவிற்கும் செல்லாமல் இருக்கலாமே!'நாங்கள் வரும்போது, ஹிந்து மதம் தொடர்பான, எந்த வரவேற்புக்கும் ஏற்பாடு செய்யக் கூடாது'என, தி.மு.க.,வினருக்கு, ஸ்டாலின் உத்தரவிடலாமே!

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
27-நவ-202007:52:09 IST Report Abuse
venkat Iyer வெ.ரோஜா ஆசிரியை அவர்களே,உங்களின் ஆதங்கம் என்னை மெய் சிலிர்க்க வைத்தாலும் உங்கள் அரசு பள்ளி ஆசிரியர்களின் தரம் உயர்ந்து உள்ளதா என்பதை எனது கிராமத்து அரசு பள்ளி மாணவர்களை வைத்து கூறுகின்றேன்.பத்தாம் வகுப்பு மாணவனை கூப்பிட்டு ஒரு கடிதம் நான் சொல்ல சொல்ல எழுதச் சொன்னேன்.இது தமிழில் ஒரு ஒப்பந்தம் கடிதமாகும். அந்த பையன் எழுதியதை நான் படித்து பார்த்தபோது அதிர்ச்சியானேன்.ன' வுக்கும் 'ந' வுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஆங்கிலத்தில் படிக்க முடியவில்லை.இதில் பத்தாம் வகுப்பு பரிட்சை எழுதாமல் பாஸ் போட்டு விட்டாச்சு.டிரைவர் வேலைக்கு போனம்னா கூட ஊர் பெயரை படிக்க தெரிஞ்சா தான் நாம் எங்கே போறோம் என்று தெரியும்.அரசு பள்ளியில் வசதி இல்லாத மாணவர்கள்தான் படிக்க வருகிறார்கள்.அவர்கள் இருக்கும் சூழல் அடிமட்ட கிராமப்புரம்.அவர்கள் இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப உங்களால் பாடம் சொல்லி கொடுத்தால் அந்த மாணவர்கள் புரிந்து கொள்ள முடியும்.இதில் பத்து சதவீதம் பேராவது பேசக்கூடியவராக உள்ளார்களா?.பள்ளியில் மாணவர்களுக்கு அனைவருக்கும் மதிப்பெண் கூடுதலாக போட்டு சராசரி மதிப்பெண்ணை உயர்த்தி பெற்றோர்கள் கேள்வி கேட்காத வகையில் வைத்து உள்ளீர்கள் என்பது தெரியாமல் ஒன்றும் இல்லை.அரசும் உங்களுடன் சேர்ந்து புல்லாங்குழல் உதவுகிறது.கணக்கில் ஒரு சூத்திரத்தினை மாணவன் மனப்பாடமாக வைத்து உள்ளானா?.ஆங்கிலம் மற்றும் கணக்கில் நூற்றுக்கு என்பது சதவீதம் மாணவர்கள் கரைசேரா முடியாமல் உள்ளார்கள்.அவனை அடித்தால் படித்துவிடுவானா?.மனநிலை அறிந்து பாடம் நடத்த தெரியுமா?.மாணவனிடம் ஒழுக்க நெறியை போதிக்கும் ஆசிரியர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?.சமுகத்துக்கு நம்பிக்கையை கொடுங்கள்.பின்னர் தனியார் பள்ளியை குறைக்க பார்க்கலாம்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
25-நவ-202010:15:52 IST Report Abuse
Darmavan திமுக ... பச்சோந்தி.
Rate this:
Cancel
திருட்டு  திராவிடன் இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X