நவ., 25, 2014
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1920 நவ., 8ம் தேதி பிறந்தவர், சிதாராதேவி. இயற்பெயர், தனலட்சுமி. தன், 16வது வயதில், கதக் நாட்டியம் அரங்கேற்றம் செய்தார். இந்தியா மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளில் கதக் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளர். 1967ல், லண்டன் ஆல்பர்ட் அரச மண்டபத்திலும், 1976ல், நியூயார்க் கமேஜி மண்டபத்திலும், கதக் ஆடினார். ரவீந்திரநாத் தாகூரால், 'நாட்டியப் பேரரசி' எனப் பாராட்டு பெற்றவர். கதக் மட்டுமின்றி பரதம், பாலே நடனமும் அறிந்திருந்தார். 'பத்ம ஸ்ரீ, சங்கீத நாடக அகாதமி' உட்பட, ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். 'பத்ம பூஷண்' விருதை பெற, மறுத்து விட்டார். 2014 நவ., 25ம் தேதி, தன், 94வது வயதில் இயற்கை எய்தினார்.'கதக் ராணி' சிதாராதேவி காலமான தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE