விரோதமான கூட்டணி!
மஹாராஷ்டிராவில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் அமைத்துள்ளது, இயற்கைக்கு விரோதமான கூட்டணி. இந்த அரசை கலைக்க, நாங்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ள தேவையில்லை; அது தானாகவே கவிழும். அதன் பின் நாங்கள் வலிமையான அரசை அமைப்போம்.
தேவேந்திர பட்னவிஸ்
மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர், பா.ஜ.,
என்ன அவசியம்?
பீஹார் மாநில கல்வி அமைச்சராக, ஊழல் குற்றச்சாட்டுகளை சந்தித்து வரும் ஒருவரை, முதல்வர் நிதிஷ் குமார் நியமித்தது ஏன்? அதிலும், எம்.எல்.ஏ., அல்லது எம்.எல்.சி.,யாக இல்லாத ஒருவரை, கல்வி அமைச்சராக நியமித்ததற்கான அவசியம் என்ன ஏற்பட்டது என தெரியவில்லை.
தேஜஸ்வி யாதவ்
தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்.
உண்மையான வளர்ச்சி
சுயசார்பு இந்தியா திட்டத்தின் முக்கிய பகுதிகளாக, கிராமப் பொருளாதாரமும், விவசாயமும் உள்ளன. இவை இரண்டும் வளர்ச்சியடைந்தால் தான், நாடு உண்மையான வளர்ச்சியை பெறும். அதற்கான நடவடிக்கைகளை, பிரதமர் மோடி எடுத்து வருகிறார்.
நிதின் கட்கரி
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர், பா.ஜ.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE