'டில்லி கிரைம்' தொடருக்கு விருது
மும்பை: 'நெட்ப்ளிக்ஸ்' நிறுவனம், 'வெப் சீரிஸ்' எனப்படும், இணைய தொடர்களை தயாரித்து, வெளியிட்டு வருகிறது. 'டில்லி கிரைம்' என்ற இணைய தொடரை, கடந்த ஆண்டு வெளியிட்டது. கடந்த, 2012ல், டில்லியில் நடந்த, நிர்பயா பாலியல் பலாத்கார சம்பவத்தை அடிப்படையாக வைத்து, இந்த தொடர் உருவாக்கப்பட்டது. வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த, இந்திய வம்சாவளி இயக்குனர் ரிச்சி மேத்தா, இந்த தொடரை இயக்கினார். அமெரிக்காவின் புகழ்பெற்ற, 'எம்மி' விருதுகளின், நாடக பிரிவில், இந்த தொடர் விருது வென்றுள்ளது.
விவசாயிகளுக்கு அரசு அழைப்பு
புதுடில்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப் மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மாநில விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை அழைத்து, மத்திய அரசு, சமீபத்தில் பேச்சு நடத்தியது. இதில், சுமுக தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து, அடுத்த மாதம், 3ம் தேதி, இரண்டாம் கட்ட பேச்சு நடத்த, 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினருக்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
'ஏர் இந்தியா ஒன்' முதல் பயணம்
புதுடில்லி: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட, வி.வி.ஐ.பி.,க்கள் பயணிக்க, 'போயிங் - 777' அதிநவீன விமானம், அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. 'ஏர் இந்தியா ஒன்' என அழைக்கப்படும் இந்த விமானம், முதல் பயணத்தை நேற்று துவக்கியது. இதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தன் மனைவியுடன் பயணித்தார். டில்லியில் இருந்து சென்னை வந்த ஜனாதிபதி, அங்கிருந்து வேறு விமானம் வாயிலாக, திருப்பதி கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE