புதுக்கோட்டை பகுதியிலும் மிளகு விளையும்!
வழக்கமாக, கேரளா போன்ற மழை அதிகம் பெய்யும், இயற்கை வளம் நிறைந்த பகுதிகளில் தான் மிளகு வளரும் எனக் கூறப்படும் நிலையில், தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலங்குடி அருகே, வடகாடு கிராமத்தில், மிளகு வளர்த்து சாதனை படைக்கும் பாலுச்சாமி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமா முடித்துள்ளேன். பாரம்பரியமாக விவசாய குடும்பம் தான் எங்களுடையது. காலம் காலமாக தென்னை, வாழை தான் போடுவோம்.விவசாயத்தில் முதலில் ஆர்வம் இல்லாததால், உள்ளூரில், பேப்பர் மில்லில் போர்மேனாக வேலை செய்தேன். அதன் பின், கேரளா சென்று, மிஷின் பிட்டராக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தேன். கேரளாவில் பார்க்கும் இடங்களில் எல்லாம் மிளகு தான். அங்கே இருக்கும் போது, ஒரு ஆண்டில், மூன்று மாதம் தொடர்ந்து மழை. மிளகு விளைச்சல் இல்லை. அப்போது தான், மிளகு விளைய மழையுடன், நல்ல சூரிய வெளிச்சமும் தேவை என்பதை அறிந்தேன்.இரண்டும் நம்ம ஊரில் இருக்கிறதே என எண்ணி, சோதனை முயற்சியாக, ௧௯௮௬ல், 10 மிளகு கன்றுகளை வாங்கி வந்து, கிராமத்தில் இருக்கும் விவசாய நிலத்தில் நட்டேன். ஏற்கனவே, மிளகு சாகுபடி குறித்து கொஞ்சம் தெரியும் என்பதால், மிகவும் கவனமாக வளர்த்தேன். எதிர்பார்த்தது போலவே, நம்ம பூமியிலும் மிளகு சிறப்பாக வளர்ந்தது. முதல் ஆண்டிலேயே வருமானம் கிடைத்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு பின் தான், நல்ல வருமானம் கிடைத்தது.
தொடர்ந்து சாகுபடி செய்து வந்தேன். அந்த உற்சாகத்தில், பெரிய அளவில் மிளகு சாகுபடி செய்கிறேன். இப்போது, தென்னை, வாழை எல்லாம் கிடையாது; ஒரே மிளகு சாகுபடி மட்டும் தான்.மிளகு நடவு செய்ய, ஜூன், டிசம்பர் மாதங்கள் தான் ஏற்றவை. செம்மண் பூமியில் நன்றாக வளரும்; மணற்பாங்கான, கரிசல் மண்ணில் வளராது. மைக்ரோ கிளைமேட் சூழல் இருந்தால், நன்றாக வளரும். அதனால், தென்னைக்கு அருகில் நடவு செய்யலாம். வளர்ந்து விட்டால், மிளகுக்கு என தனியாக, பாசனமோ அல்லது பராமரிப்போ தேவையில்லை. முள்முருங்கை, அகத்தியை தவிர்த்து, தென்னை, வாத நாராயணன், கிளுவை என, பிற மரங்களிலும் மிளகு கொடி வளரும்.மிளகு கொடி நன்றாக வளர்ந்த பின், ஆண்டுக்கு ஒருமுறை, ஒவ்வொரு கொடிக்கும், ௫ கிலோ தொழுவுரம் வைக்க வேண்டும். ஒரு முறை வளர்ந்து விட்டால், ௫௦ ஆண்டுகள்
வரை விளைச்சல் கொடுக்கும்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE