20 டாலர் விலையில் கிடைக்குமா ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து?

Updated : நவ 24, 2020 | Added : நவ 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதை அடுத்து உலக நாடுகள் பலவற்றில் தடுப்பு மருந்து சோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக ரஷ்யா ஸ்பூட்நிக் 5 என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருந்தது. இந்தத் தடுப்பு மருந்தை தனது மகளுக்கு செலுத்தி சோதனை செய்து தன்மகள் உடல்நலம் பெற்றதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பெருமிதம் தெரிவித்திருந்தார்.தற்போது

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதை அடுத்து உலக நாடுகள் பலவற்றில் தடுப்பு மருந்து சோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக ரஷ்யா ஸ்பூட்நிக் 5 என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருந்தது. இந்தத் தடுப்பு மருந்தை தனது மகளுக்கு செலுத்தி சோதனை செய்து தன்மகள் உடல்நலம் பெற்றதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பெருமிதம் தெரிவித்திருந்தார்.



latest tamil news



தற்போது அமெரிக்காவின் மாடர்னா, பைஸர், ஜெர்மனியின் பயான்டெக் பிரிட்டனின் ஆஸ்ட்ராசெனேகா உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் உலக அளவில் மூன்றாம் கட்ட சோதனையை முடித்து விற்பனைக்கு தயாராகி வருகின்றன. வரும் ஜனவரி மாதம் தடுப்பு மருந்துகளை உலக நாடுகளிடம் விற்க கடும் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. ஆஸ்ட்ராசெனேகா தடுப்பு மருந்து இந்தியாவில் 500-600 ரூபாய் விலையில் விற்கப்பட வாய்ப்பு உள்ளது என முன்னதாக தகவல் வெளியானது.
இதனைத்தொடர்ந்து தற்போது ரஷ்யாவின் ஸ்பூட்நிக் ஐந்து தடுப்பு மருந்து உலக நாடுகளில் 20 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்புப்படி ஒரு டோஸ் ரஷ்ய தடுப்பு மருந்து 1,750 ரூபாய் விற்கப்பட வாய்ப்பு உள்ளது.


latest tamil news



தடுப்பு மருந்து நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க அதிரடி ஆஃபர்களை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் பொருட்கள் வாங்குவது போன்று எதிர்காலத்தில் தடுப்பு மருந்துகள் வாங்க மக்கள் கூட்டம் முண்டியடிக்கலாம் என வேடிக்கையாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - Tiruvallur,இந்தியா
25-நவ-202014:34:53 IST Report Abuse
R S BALA அதெல்லாம் எங்களுக்கு ஒன்னியும் வேணாம் ... எங்க வேக்சின் பார்முலா சொல்றேன் நோட் பண்ணி தயாரிச்சிக்குங்க ... சுக்கு மல்லி மிளகு ஏலக்காய் இவற்றை சுடுநீரில் கொதிக்கவைத்து கருப்பட்டி கலந்து இறுதியாக சாத்துக்குடி சாற்றினை சேர்த்து அருந்தி வாருங்கள் சுட சுட ... நல்ல நோய் எதிர்ப்பு சக்தியாக இது உள்ளது .. மார்ச் மாதத்திலிருந்து இந்நாள் வரை எனது சொந்த அனுபவம் ...வாழ்க நலமுடன் அனைவரும் .
Rate this:
Cancel
25-நவ-202009:48:25 IST Report Abuse
ஆப்பு ஈஜுபுத்துலேருந்து வெங்காயம் மாதிரி வேக்சினும் இறக்குமதி பண்ணமுடியாதா?
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
25-நவ-202008:17:18 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இந்தியாவிற்கு அதிகம் தேவை படாது. இங்குள்ளவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம். நம் உணவு முறை அப்படி. இப்போது மேலை நாடுகளும் நம் உணவு முறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகின்றனர். ஆனால் நாம்தான் பிஸ்சா purgar பின்னால் அலைகிறோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X