பொது செய்தி

தமிழ்நாடு

தென்னை மரங்கள் காப்பதற்கு வேளாண் துறையினர் 'ஐடியா'

Added : நவ 24, 2020
Share
Advertisement
புயல் பாதிப்பில் இருந்து, தென்னை மரங்களை பாதுகாப்பது குறித்து, செங்கல்பட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பி.அசோகன் கூறியதாவது:தமிழகத்தில், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பலத்த கன மழை பெய்யலாம் என, முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு, தென்னை மரங்கள் சேதமாவதற்கு வாய்ப்பு உள்ளன. இதனால், தென்னை

புயல் பாதிப்பில் இருந்து, தென்னை மரங்களை பாதுகாப்பது குறித்து, செங்கல்பட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பி.அசோகன் கூறியதாவது:தமிழகத்தில், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பலத்த கன மழை பெய்யலாம் என, முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதற்கு, தென்னை மரங்கள் சேதமாவதற்கு வாய்ப்பு உள்ளன. இதனால், தென்னை விவசாயிகளுக்கு, இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.இதை தவிர்ப்பதற்கு, தென்னை சாகுபடி செய்த விவசாயிகள், தென்னை மரங்களில், முதிர்ந்த தேங்காய் மற்றும் இளநீரை அறுவடை செய்து விடலாம்.தென்னை ஓலைகளை கழித்து, மேல் பாரம் குறைக்கலாம். தென்னை மரத்தின் அடிபாகத்தில், உயரமாக மண் அணைக்க வேண்டும். மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது மற்றும் உரமிடுவதை தவிர்க்க வேண்டும்.

குட்டை மற்றும் ஒட்டு ரகங்களுக்கு, 4 ஆண்டு முதல்; நெட்டை மரங்களுக்கு, 7 ஆண்டு முதல், 60 ஆண்டு வரையில், 'அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட்' சென்னை என்ற முகவரியில், வங்கி வரைவோலை எடுக்க வேண்டும்.அதை, காப்பீடு பரிந்துரை கடிதம், ஆதார், சிட்டா, அடங்கல், வரைபடம், விவசாயிகளின் போட்டோ, வேளாண் உதவி இயக்குனரின் காப்பீடு திட்டத்திற்குரிய பரிந்துரை கடிதம், வங்கி கணக்கு புத்தகம் நகலை, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:044- - 2742 8391இது தான் காப்பீடு தொகைவயது காப்பீடு தொகை4 வயது முதல்,7 வயது வரை ரூ.90016 வயது முதல், 60 வயது வரை ரூ.1,750* விவசாய மலர் பகுதிக்கு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X