தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக உழவர் பயிற்சி மையம் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை இணைந்து, கறவை மாடு வளர்ப்பு குறித்து, இணைய வழி பயிற்சி, நாளை அளிக்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் உழவர் பயிற்சி மையத்தில், கறவை மாடு வளர்ப்பு குறித்து, 'ஜியோ மீட் ஆப்' மூலமாக மதியம், 2:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை, இலவச இணைய பயிற்சி, நாளை நடைபெற உள்ளது.இதில், உழவர் பயிற்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் சவுந்திரராஜன், உதவி பேராசிரியர் கோபி ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர். ஆர்வம் இருக்கும், கறவை மாடு வளர்க்கும் விவசாயிகள், மொபைல் போனில், 'பிளே ஸ்டோர்' மூலமாக, 'ஜியோ மீட் ஆப்' பதிவிறக்கம் செய்து, 37178 37442 என்னும் ஐடியில், 'Db6X8' என்னும் ரகசிய குறியீடு உள்ளீடு செய்து; பயிற்சியில் பங்கு பெறலாம்.தொடர்புக்கு:044- - 2726 4019* விவசாய மலர் பகுதிக்கு* விவசாய மலர் பகுதிக்கு
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE