பொது செய்தி

தமிழ்நாடு

நவரை பருவ சாகுபடிக்கு 'ஆடுதுறை- - 53' ரக நெல் தயார்

Added : நவ 24, 2020
Share
Advertisement
'ஆடுதுறை- - 53' ரக நெல் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பெ.சாந்தி கூறியதாவது: தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம், 2019ல், 'ஆடுதுறை- - 53' என்ற புதிய ரக நெல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இது, நவரை பருவ சாகுபடி செய்வதற்கு ஏற்றது; 110- - 115 நாட்களில், அறுவடைக்கு வரும். 'ஆடுதுறை- - 43' மற்றும்

'ஆடுதுறை- - 53' ரக நெல் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பெ.சாந்தி கூறியதாவது:

தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம், 2019ல், 'ஆடுதுறை- - 53' என்ற புதிய ரக நெல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இது, நவரை பருவ சாகுபடி செய்வதற்கு ஏற்றது; 110- - 115 நாட்களில், அறுவடைக்கு வரும். 'ஆடுதுறை- - 43' மற்றும் 'ஜே.ஜி.எல்.-, - 384' பெற்றோரை கொண்டு, உருவாக்கப்பட்ட மத்திய சன்ன ரகமாகும்.நீளமான கதிர் உடையது. அதிக துார் களைக்கும் தன்மை மற்றும் மழைக்கு சாயாது. இதன் அரிசி, 65 சதவீத அரவை திறன் உடையது. 1 ஏக்கருக்கு, 2,533 கிலோ மகசூல் பெறலாம்.

இலை சுருட்டு புழு, பழுப்பு புள்ளி, குலைநோய்கள் எதிர்ப்பு திறன் வாய்ந்தது. அரிசி சாதம் வடிக்கும் போது குழையாது. திரூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், 1,200 கிலோ விதை நெல் இருப்பு உள்ளது. 1 கிலோ, 30 ரூபாய்க்கு விதை நெல் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு:044- - 2762 0705 / 94444 78234* விவசாய மலர் பகுதிக்கு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X