பொது செய்தி

இந்தியா

கேரள அரசு அவசர சட்டம்: ஐ.என்.எஸ்., கண்டனம்

Updated : நவ 26, 2020 | Added : நவ 24, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: அவதுாறு பரப்பும் வகையிலான பதிவுகள் அல்லது செய்திகளை வெளியிட்டால், சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்து, கேரள அரசு நிறைவேற்றியுள்ள அவசர சட்டத்துக்கு, ஐ.என்.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளது. அறிக்கைஐ.என்.எஸ்., எனப்படும், இந்திய செய்திதாள்கள் சங்க தலைவர் எல்.ஆதிமூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
Kerala, INS, Press, கேரள அரசு, அவசர சட்டம், கண்டனம்

புதுடில்லி: அவதுாறு பரப்பும் வகையிலான பதிவுகள் அல்லது செய்திகளை வெளியிட்டால், சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்து, கேரள அரசு நிறைவேற்றியுள்ள அவசர சட்டத்துக்கு, ஐ.என்.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளது.


அறிக்கை


ஐ.என்.எஸ்., எனப்படும், இந்திய செய்திதாள்கள் சங்க தலைவர் எல்.ஆதிமூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரளாவில் ஆளும், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் வகையில், போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்து, அவசர சட்டம் நிறைவேற்றியுள்ளது.

சமூக வலைதளம் உட்பட அனைத்து செய்தி ஊடகங்களிலும், தனிநபரை இழிவுபடுத்தும், தவறான செய்திகளை வெளியிட்டால், சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்க, இந்த அவசர சட்டத்தில் வழி காணப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்துக்கு, ஐ.என்.எஸ்., கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

ஏனெனில், இந்த அவசர சட்டத்தை பயன்படுத்தி, அச்சு, மின்னணு, டிஜிட்டல் ஊடகங்களின் குரல்வளையை நெறிக்க, கேரள அரசு முயற்சிக்கிறது.அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான இந்த சட்டத்தை, கேரள அரசு வாபஸ் பெற வேண்டும்.

இதேபோன்ற ஒரு வழக்கில், கடந்த, 2015ல், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை மீறுவதாக உள்ளது எனக் கூறி, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு, '66ஏ' மற்றும் கேரள போலீஸ் சட்டத்தின் பிரிவு, '118டி' ஆகியவற்றை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
அதிகாரம்


சமூக வலைதளங்களை சுயக்கட்டுப்பாட்டுடன், அனைவரும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை, ஐ.என்.எஸ்., ஏற்றுக் கொள்கிறது. கேரள அரசின் அவசர சட்டத்துக்கு, பல தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ளது. கேரள சட்டசபையில் முழுமையாக விவாதிக்கப்பட்ட பின் தான், அவரச சட்டம் அமல்படுத்தப்படும் என, முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்கும் அதிகாரம், சட்டசபைக்கு உள்ளது. அதனால், இந்த அவசர சட்டத்தை திரும்ப பெற, புதிய அவசர சட்டம் கொண்டு வந்து, பத்திரிகை சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டும் என, கேரள முதல்வரை, ஐ.என்.எஸ்., கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு, ஆதிமூலம் கூறியுள்ளார்.


அவசர சட்டம் வாபஸ்


சர்ச்சைக்குரிய போலீஸ் சட்ட திருத்த அவசர சட்டத்தை வாபஸ் பெற, கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரள அமைச்சரவை கூட்டம், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், நேற்று நடந்தது. இதில், கேரள போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு பிறப்பிக்கப்பட்டுள்ள, அவசர சட்டத்தை வாபஸ் பெற, முடிவு செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை வாபஸ் பெற, புதிய அவசர சட்டம் பிறப்பிக்கவும், கவர்னருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
25-நவ-202016:33:14 IST Report Abuse
Endrum Indian செய்தி ரொம்பவே பழசு இதை உடைப்பில் போட்டாச்சி.கேரளாவில் போலீசாருக்கான கூடுதல் அதிகார உத்தரவு தற்காலிகமாக ரத்து - பினராயி விஜயன் நடவடிக்கை
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
25-நவ-202014:35:31 IST Report Abuse
Allah Daniel தங்கம் கடத்துறவன், போடுற சட்டத்தை பாரு..
Rate this:
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
25-நவ-202012:50:50 IST Report Abuse
N.K இதுதான் கம்யூனிசம். மெல்ல மெல்ல ஒரு எமெர்ஜெனஸி காலம் போன்ற ஆட்சிக்கு நகர்வார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X