பொது செய்தி

தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் புயல் மின் சாதனங்கள் தப்புமா?

Added : நவ 24, 2020
Share
Advertisement
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி வருகையால், மாமல்லபுரத்தில், தரைக்கு அடியில், 'கேபிள்' வாயிலாக, மின் வினியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டதால், அங்கு புயல் தாக்கினாலும், மின் சாதனங்கள் சேதமடைய வாய்ப்பில்லை. மழை, புயலின்போது, மின் கம்பங்கள் சாய்ந்து, மின் கம்பி அறுந்து விழுவதால், மின் தடை ஏற்படுகிறது. குறிப்பாக, கடலோர மாவட்டங்களில், மழை காலங்களில், மின்

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி வருகையால், மாமல்லபுரத்தில், தரைக்கு அடியில், 'கேபிள்' வாயிலாக, மின் வினியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டதால், அங்கு புயல் தாக்கினாலும், மின் சாதனங்கள் சேதமடைய வாய்ப்பில்லை.

மழை, புயலின்போது, மின் கம்பங்கள் சாய்ந்து, மின் கம்பி அறுந்து விழுவதால், மின் தடை ஏற்படுகிறது. குறிப்பாக, கடலோர மாவட்டங்களில், மழை காலங்களில், மின் வினியோக சாதனங்கள் சேதமடைவது தொடர்கிறது.தமிழக மின் வாரியம், சென்னையில் உள்ள, 75 சதவீத பகுதிகளில், தரைக்கு அடியில் கேபிள்; மற்ற பகுதிகளில், மின் கம்பம் வாயிலாக, மின் வினியோகம் செய்கிறது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், 2019 அக்., மாதம், மாமல்லபுரம் வந்தனர்.இரு தலைவர்களின் வருகையை முன்னிட்டு, மாமல்லபுரத்தில், சாலை உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் மேம்படுத்தப்பட்டன.

இதன்படி, மின் வாரியம் சார்பில், மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மின் கம்பங்களுக்கு மாற்றாக, தரைக்கு அடியில், கேபிள் வாயிலாக, மின் வினியோகம் செய்யும் பணி, போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டது.மேலும், நவீன டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட மின் வினியோக சாதனங்கள் நிறுவப்பட்டதுடன், அவை, அழகிய வடிவங்களுடன் கூடிய இரும்பு வேலிகளால் மறைக்கப்பட்டன.இந்நிலையில், மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே, 'நிவர்' புயல், இன்று கரையை கடக்கிறது. இதனால், பலத்த காற்று வீசினாலும், மாமல்லபுரத்தில், மின் வினியோக சாதனங்கள் சேதமடைய வாய்ப்பில்லை என, மின் வாரிய அதிகாரிகள் நம்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X