பொது செய்தி

தமிழ்நாடு

பயன்பாடில்லாத கிருமி நாசினி சாதனம்

Added : நவ 24, 2020
Share
Advertisement
கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியத்தில், கிருமி நாசினி உற்பத்தி சாதனம் பயன்பாடில்லாமல் வீணாகி வருகிறது. கடம்பத்துார் ஒன்றியம், சத்தரை கிராமத்தில், ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 68 ஆயிரம் ரூபாய் மதிப்பில், சூரிய சக்தியால் இயங்கும் சோடியம் ஹைப்போ குளோரைட் கிருமி நாசினி உற்பத்தி சாதனம், கடந்த ஏப்., 28ம் தேதி அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.அதன்பின், தொடர்ந்து

கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியத்தில், கிருமி நாசினி உற்பத்தி சாதனம் பயன்பாடில்லாமல் வீணாகி வருகிறது.

கடம்பத்துார் ஒன்றியம், சத்தரை கிராமத்தில், ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 68 ஆயிரம் ரூபாய் மதிப்பில், சூரிய சக்தியால் இயங்கும் சோடியம் ஹைப்போ குளோரைட் கிருமி நாசினி உற்பத்தி சாதனம், கடந்த ஏப்., 28ம் தேதி அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.அதன்பின், தொடர்ந்து மூன்று மாதங்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இங்கு உற்பத்தி செய்யப்படும் அடர்த்தியான திரவமாக கிடைக்கும் கிருமி நாசினியுடன், 1 லிட்டர் அளவுக்கு தேவைக்கேற்ப, 10 -- 20 லிட்டர் தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம்.கிருமி நாசினியாக மட்டும் பயன்படுத்தாமல், பாத்திரங்கள், தரை, டாய்லெட்டுகள் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் கிருமி நாசினிகள் தயாரிக்கும் மூலப்பொருட்களாகவும் பயன்படுத்தலாம் என, அறிவியல் ஆலோசகர் இளங்கோ கூறியிருந்தார்.

முதல் மூன்று மாதங்கள் செயல்பட்ட இந்த உற்பத்தி சாதனம், அதன்பின் நான்கு மாதங்களாக எவ்வித பயன்பாடில்லாமல் வீணாகி வருகிறது.மேலும், தற்போது சத்தரை ஊராட்சியில் துவக்கப்பட்ட கிருமி நாசினி உற்பத்தி சாதனம், துணிகள் உலர வைக்கும் இடமாக மாறியுள்ளது, சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம், கிருமி நாசினி உற்பத்தி சாதனத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X