பீஜிங்:நிலவில் இருந்து பாறை துகள்கள் உள்ளிட்ட மாதிரி களை, பூமிக்கு எடுத்து வரும் ஆளில்லா விண்கலத்தை, வெற்றிகரமாக சீனா, நேற்று விண்ணில் ஏவியது.
நிலவை ஆராய்ச்சி செய்யும் பணியில், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில், சீனாவும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. கடந்த, 1976க்கு பின், முதல் முறையாக, நிலவிலிருந்து பாறை துகள்கள் உள்ளிட்ட மாதிரி களை பூமிக்கு எடுத்து வந்து, சீனா ஆய்வு செய்ய உள்ளது.இதற்காக, 'சாங் இ - -5' என்ற ஆளில்லா விண்கலத்தை, நேற்று அதிகாலை, சீனா விண்ணில் ஏவியது.
சீனாவின் ஹனைன் மாகாணத்தில் உள்ள, வென்சாங் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, 'லாங் மார்ச் 5' ராக்கெட் வாயிலாக, 'சாங் இ - -5' விண்கலம் ஏவப்பட்டது. நிலவில், இதுவரை கால் பதிக்கப்படாத, 'ஓஷன் ஆப் ஸ்டார்ம்ஸ்' என்ற பகுதியிலிருந்து, 2 கிலோ பாறை துகள்களை எடுத்து வர சீனா திட்டமிட்டுள்ளது.
இந்த விண்கலம், நிலவிலிருந்து பாறைத்துகள்களை சேகரித்து, அடுத்த சில மாதங்களில் பூமிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.இத்திட்டம் வெற்றி அடைந்தால், அமெரிக்கா, ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக, நிலவில் உள்ள பாறைகளை ஆய்வு செய்யும் மூன்றாவது நாடு என்ற பெருமையை சீனா பெறும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE