சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உதவித்தொகை கிடைக்காமல் முதியோர் தவிப்பு

Added : நவ 24, 2020
Share
Advertisement
பொன்னேரி : முதியோர் உதவித்தொகை கிடைக்காமல், வயதானவர்கள் பெரும் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். பொன்னேரி வட்டத்தில், 38 ஆயிரம் பேர், முதியோர் உதவித்தொகை பெற்று வருகின்றனர். நெருங்கிய உறவுகள் இல்லாமல் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, தமிழக அரசு, மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது.முதியோர் உதவித்தொகை

பொன்னேரி : முதியோர் உதவித்தொகை கிடைக்காமல், வயதானவர்கள் பெரும் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.

பொன்னேரி வட்டத்தில், 38 ஆயிரம் பேர், முதியோர் உதவித்தொகை பெற்று வருகின்றனர். நெருங்கிய உறவுகள் இல்லாமல் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, தமிழக அரசு, மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது.முதியோர் உதவித்தொகை வயதானவர்கள் உணவு மற்றும் மருத்துவ செலவுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். வங்கி மற்றும் மணியார்டர் மூலம் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பொன்னேரி வட்டத்தில், இந்த மாதம், இதுவரை, 18 ஆயிரம் பேருக்கு, முதியோர் உதவித்தொகை வழங்கபடாமல் உள்ளது.தீபாவளியின் உதவித்தொகையை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. உணவு மற்றும் மருத்துவ செலவினங்களுக்கு பணம் இன்றி தவிக்கின்றனர்.இது தொடர்பாக, தடப்பெரும்பாக்கம் ஊராட்சி, 7வது வார்டு உறுப்பினர் லட்சுமி, சமூக ஆர்வலர் பிரேம்குமார் ஆகியோர் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியரிடம், முறையிட்டு புகார் அளித்தனர்.அதில், முதியோர் உதவித்தொகையை நம்பி ஏராளமானோர் இருப்பதாகவும், அவர்களுக்கு உரிய நேரத்தில் அத்தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X