திருவள்ளூர் : விவசாயிகளின் நிலங்களுக்கே சென்று ஆலோசனை வழங்கும், உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.
வேளாண் துறையை வலுப்படுத்த, உழவர் அலுவலர் தொடர்பு என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இத்திட்டத்தின் மூலம், வேளாண் துறை அதிகாரிகள் விளைநிலங்களுக்கே சென்று, விவசாயிகளை சந்தித்து, சாகுபடி தொழில்நுட்ப யுக்திகள் குறித்து ஆலோசனை வழங்குவர்.வட்டார அளவில் வேளாண் உதவி இயக்குனரை, குழு தலைவராகவும்; தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானி, வேளாண் அலுவலர் மற்றும் துணை வேளாண் அலுவலர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு, வட்டார விரிவாக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இக்குழு, 15 நாட்களுக்கு ஒருமுறை கூடி, அடுத்த, 15 நாட்களுக்கு, பயிர்களுக்கு தேவையான தொழில்நுட்பங்கள், செயல்விளக்கங்கள் மற்றும் விரிவாக்க பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகள் ஆகியவற்றை கலந்தாலோசித்து முடிவு செய்யும்.அனைத்து கிராம பஞ்சாயத்து களிலும், நல்ல பேச்சு திறனும், தலைமை பண்பும் உடைய முன்னோடி விவசாயிகள், ஒரு பஞ்சாயத்துக்கு, 10 பேர் வீதம் தேர்வு செய்யப்படுவர்.இத்திட்டத்தை, கலெக்டர் பொன்னையா துவக்கி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE