வாஷிங்டன்:அமெரிக்க பல்கலையில், ஜைன மதக் கல்விக்காக, தனி இருக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, மூன்று தம்பதியர், 7.50 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர்.
அமெரிக்காவில், சாண்டா பார்பரா நகரில் உள்ள, கலிபோர்னியா பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை:பல்கலையில் ஜைன மதக் கல்விக்கு, 'பகவான் விமல்நாத் என்டோவ்டு சேர்' என்ற தனி இருக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதற்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் மீரா -- ஜஸ்வந்த் மோடி; ரீடா - நரேந்திர பர்சன் மற்றும் ரக் ஷா - ஹர்ஷத் ஷா ஆகிய மூன்று தம்பதியர், தங்கள் அறக்கட்டளைகள் வாயிலாக, 7.50 கோடி ரூபாய் நன்கொடை அளித்து உள்ளனர்.
இந்த இருக்கை வாயிலாக, அஹிம்சை, பற்றின்மை, பன்முக பார்வை மற்றும் நம்பிக்கை உள்ளிட்ட, ஜைன மதக் கொள்கைகள், தற்கால சமூகத்தில் ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்து மாணவர்கள் அறியவும், ஆய்வு செய்யவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜைன மதக் கல்வியில் பட்டம் பெறும் மாணவர்கள் மூலம், உலகில் அஹிம்சைக் கொள்கைகள் வேகமாக பரவும். சமுக முன்னேற்றம், பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட வாழ்வின் பல்வேறு நிலைகளுக்கு பயன்படும்.
சமஸ்கிருதம், பிராகிருதி ஆகிய மொழிகளில், ஜைனம் மற்றும் தெற்காசிய மதங்கள் குறித்து போதிக்கவும், ஆய்வு செய்யவும், தனி இருக்கை உதவும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE