வெள்ளவேடு : வெள்ளவேடு அடுத்த, கன்ணன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் தனசேகர், 20. இவர், நேற்று முன்தினம், டிராக்டரில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு, அதை டெலிவரி செய்வதற்காக, தாம்பரம் நோக்கி, திவாகர், 22, என்பவருடன், சென்று கொண்டிருந்தார்.
அப்போது, 400 அடி வெளிவட்ட சாலையில், காவல்சேரி அருகே சென்று போது முன்னால் எவ்வித சிக்னலும் இல்லாமல் நின்று கொண்டிருந்த ஈச்சர் லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், திவாகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த தனசேகர், பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, வெள்ளவேடு போலீசில், தனசேகர் சகோதரர் ரோகித் அளித்த புகாரையடுத்து, போலீசார் ஈச்சர் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE