காஷ்மீரில் தாக்குதலுக்கு சதி பயங்கரவாதி சிங்கப்பூரில் கைது

Added : நவ 24, 2020
Share
Advertisement
சிங்கப்பூர்:ஜம்மு - காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட, வங்கதேசத்தைச் சேர்ந்தவர், ஆசிய நாடான சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.ஐரோப்பிய நாடுகளில் சமீபத்தில், பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து, ஆசிய நாடான சிங்கப்பூர்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பலரை கண்காணித்து வந்தது. சமூக வலைதளங்களில், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டோர் உட்பட, 37

சிங்கப்பூர்:ஜம்மு - காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட, வங்கதேசத்தைச் சேர்ந்தவர், ஆசிய நாடான சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் சமீபத்தில், பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து, ஆசிய நாடான சிங்கப்பூர்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பலரை கண்காணித்து வந்தது. சமூக வலைதளங்களில், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டோர் உட்பட, 37 பேர் கண்காணிப்பில் இருந்தனர்.அதில், 14 பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள்; மீதமுள்ளவர்கள், வங்கதேசம் உட்பட வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். வெளிநாட்டைச் சேர்ந்த, 23 பேரில், 15 வங்கதேசத்தவர் மற்றும் ஒரு மலேஷியர், நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

மீதமுள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், வங்க தேசத்தைச் சேர்ந்த, அஹமது பைசால், 26, கைது செய்யப்பட்டு உள்ளார்.இது குறித்து, வங்கதேச உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:வங்கதேசத்தைச் சேர்ந்த அஹமது பைசல், சிங்கப்பூரில், கட்டுமான ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்ட அவர், பயங்கரவாதியாக மாறியுள்ளார். சமீபத்தில், ஐரோப்பிய நாடுகளில் நடந்த தாக்குதல்களுக்கு பழிவாங்க திட்டமிட்டிருந்தார். வங்கதேசத்தில், ஹிந்துக்களை தாக்கவும், இந்தியாவின், ஜம்மு - காஷ்மீரில் தாக்குதல்கள் நடத்தவும், அவர் திட்டமிட்டது தெரியவந்தது. கைது செய்து, அவரை தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X