சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரை லீசுக்கு வாங்கி விற்ற மோசடி பேர்வழி சிக்கினார்

Added : நவ 24, 2020
Share
Advertisement
திருமுல்லைவாயல் : 'மொபைல் ஆப்' விளம்பரத்தை பயன்படுத்தி, லீசுக்கு வாங்கிய கார்களை, விற்பனை செய்த மோசடி பேர்வழியை, போலீசார் கைது செய்தனர். சென்னை, நெற்குன்றம், கோல்டன் ஜார்ஜ் நகரைச் சேர்ந்தவர் பரந்தாமன், 30; தனியார் ஊழியர். இவர், 22ம் தேதி மாலை, திருமுல்லைவாயல், மாசில்லாமணீஸ்வரர் கோவிலுக்கு, குடும்பத்தினருடன் காரில் சென்றார்.வழிபாட்டை முடித்து, கோவிலுக்கு வெளியே வந்து

திருமுல்லைவாயல் : 'மொபைல் ஆப்' விளம்பரத்தை பயன்படுத்தி, லீசுக்கு வாங்கிய கார்களை, விற்பனை செய்த மோசடி பேர்வழியை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, நெற்குன்றம், கோல்டன் ஜார்ஜ் நகரைச் சேர்ந்தவர் பரந்தாமன், 30; தனியார் ஊழியர். இவர், 22ம் தேதி மாலை, திருமுல்லைவாயல், மாசில்லாமணீஸ்வரர் கோவிலுக்கு, குடும்பத்தினருடன் காரில் சென்றார்.வழிபாட்டை முடித்து, கோவிலுக்கு வெளியே வந்து பார்த்தபோது, அங்கிருந்த கார் மாயமானது. இது குறித்த புகாரின் அடிப்படையில், திருமுல்லை வாயல் போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில், நேற்று காலை, திருமுல்லை வாயல், சென்னை -- திருப்பதி நெடுஞ்சாலையில், வாகன சோதனையின்போது, போதிய ஆவணங்கள் இன்றி, 'எர்டிகா' காரில் வந்த வாலிபர் ஒருவர், போலீசாரிடம் சிக்கினார்.அவரிடம் விசாரித்ததில், அந்த நபர், வியாசர்பாடி, கென்னடி நகரைச் சேர்ந்த சரண், 23, என்பதும், காரை திருடி, விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்து நான்கு கார்கள் மற்றும் ஒரு 'புல்லட்' இருசக்கர வாகனத்தை, போலீசார் பறிமுதல் செய்தனர்.தொடர் விசாரணையில், திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின. 'மொபைல் ஆப்'பில் கார் லீசுக்கு விடப்படும் என்ற காரின் உரிமையாளர்களது இலவச விளம்பரங்கள் அதிகமாக உள்ளன.அந்த விளம்பரங்களை தேர்ந்தெடுத்து, வாடிக்கையாளர் போல், கார்களை லீசுக்கு வாங்கி, அதை உரிமையாளர்களுக்கே தெரியாமல் விற்று மோசடி செய்ததாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், முகப்பேர், அம்பத்துார், திருமுல்லைவாயல், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பலரை, சரண் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.இதனால், மொபைல் ஆப் விளம்பரம் வாயிலாக தொடர்பு கொள்வோரிடம், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X