பீர்க்கன்காரணை : பீர்க்கன்காரணையில், இளம்பெண் ஒருவர் மின்சாரம் பாய்ந்து, பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை, தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, காமராஜ் நகர், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் கவுசல்யா, 33.இவரது, கணவர் குமரவேல், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதன்பின், கவுசல்யா தையல் வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், அவரது வீட்டின் மதில் சுவர் கேட்டில், சாய்ந்து நின்று கொண்டிருந்தார். அப்போது, மழை பெய்து கொண்டிருந்ததால், வீட்டு மின்சாரம், சுவரில் பாய்ந்தது. இதை உணராமல் நின்ற கவுசல்யா மீது, மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே பலியானார்.பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE