சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூவர் கொலை: விசாரணைக்கு அழைக்கப்பட்டவர் தற்கொலை

Added : நவ 24, 2020
Share
Advertisement
ஆர்.கே. நகர் : மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், விசாரணைக்கு அழைக்கப்பட்டவர், மூன்றாவது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்தது, பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை, சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் தலித் சந்த், 74, இவரது மனைவி புஷ்பா பாய், 70, மகன் ஷீத்தல் குமார், 40, ஆகிய மூவரும், 11ம் தேதி, சுட்டுக் கொல்லப்பட்டனர்.விசாரணையில், மஹாராஷ்டிரா மாநிலம், புனேயில் வசிக்கும் ஷீத்தல்

ஆர்.கே. நகர் : மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், விசாரணைக்கு அழைக்கப்பட்டவர், மூன்றாவது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை, சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் தலித் சந்த், 74, இவரது மனைவி புஷ்பா பாய், 70, மகன் ஷீத்தல் குமார், 40, ஆகிய மூவரும், 11ம் தேதி, சுட்டுக் கொல்லப்பட்டனர்.விசாரணையில், மஹாராஷ்டிரா மாநிலம், புனேயில் வசிக்கும் ஷீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலா, 36, உள்ளிட்ட, ஆறு பேர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.புனே சென்ற தனிப்படை போலீசார், ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ், 33, உள்ளிட்ட மூன்று பேரை, 13ம் தேதி, கைது செய்தனர்.

பின், டில்லி, ஆக்ராவில் பதுங்கியிருந்த ஜெயமாலா, மற்றொரு சகோதரர் விலாஷ், 28, மற்றும் ராஜிவ் உத்தம் ஷிண்டே, 29, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.கொலையாளிகள் பயன்படுத்திய கார், '.32' ரக ரிவால்வர், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, ராஜிவ் துபே என்பவர் கொடுத்தது தெரியவந்தது. நேற்று முன்தினம், அவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, ஜெயமாலா அளித்த வாக்குமூலத்தில், மாமனார், மாமியார், கணவர் தவிர, உறவினர் இருவரின், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதாக கூறியிருந்தார். தற்கொலை அதன்படி, வழக்கில் தொடர்புடைய, தலித் சந்தின் தம்பி மகனான, கொருக்குப்பேட்டை, சி.பி., சாலையில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பின், 'எம்' பிளாக்கில் வசிக்கும் விஜயகுமார் ஜெயின், 45, என்பவரை விசாரிக்க, யானைகவுனி போலீசார் அழைத்திருந்தனர்.இதுதொடர்பாக, அதே குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும், உறவினரான ரமேஷ் என்பவரிடம், போலீசார், 24ம் தேதி, விசாரணைக்கு அழைத்திருப்பது மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக, விஜயகுமார் கூறினார்.

ரமேஷ், அவரை சமாதானம் செய்து, வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில், நேற்று காலை, 6:45 மணிக்கு, தன் குடியிருப்பில் இருந்து, நண்பர் ரமேஷ் வசிக்கும் 'கியூ' பிளாக்கின் மூன்றாவது மாடிக்கு சென்ற விஜயகுமார் ஜெயின், அங்கிருந்து கீழே குதித்து, தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தகவலறிந்த, ஆர்.கே.நகர் போலீசார், உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.மூவர் கொலையில், விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர், மன உளைச்சலில் தற்கொலை செய்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X