சென்னை: தமிழகத்தில், வீடுகளில், மின் பயன்பாடு கணக்கெடுத்த, 20 தினங்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையேல், மின் வினியோகம் துண்டிக்கப்படும். பின், அபராதத்துடன், கட்டணம் செலுத்தியதும், மீண்டும் மின்சாரம் வழங்கப்படும்.
இணையதளம், மொபைல் செயலி உள்ளிட்ட டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்தும் வசதி இருந்தாலும், பலரும், மின் வாரியத்தின் கட்டண மையங்களில் செலுத்தி வருகின்றனர் .வங்க கடலில் உருவாகியுள்ள, 'நிவர்' புயல், மாமல்லபுரம், புதுச்சேரி இடையே, இன்று கரையை கடக்க உள்ளது. இதனால், கடலோர மாவட்டங்களில், எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அம்மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவில் இருந்து, மழை பெய்து வருவதால், நேற்று முதல், பலர், வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. இதனால், புயல் எச்சரிக்கை உள்ள மாவட்டங்களில், நேற்று முதல், இம்மாத இறுதி வரை, மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள நுகர்வோர், அபராதம் இன்றி செலுத்த, கால அவகாசம் வழங்குமாறு, மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE