சென்னை:'நிவர்' புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள, 12 கடலோர மாவட்டங்களுக்கு, ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, டி.ஜி.பி., திரிபாதி நியமித்துள்ளார்.
அதன் விபரம்:கூடுதல், டி.ஜி.பி., தலைமையில்சிறப்பு கட்டுப்பாட்டு மையம்சென்னை, அபிராமபுரத்தில், காவல் துறை செயலாக்கப் பிரிவு எனும் கமாண்டோ பயிற்சியகம் செயல்படுகிறது. இங்கு நிவாரண மீட்பு சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.
இங்கிருந்து, செயலாக்கப் பிரிவு, கூடுதல் டி.ஜி.பி., விஸ்வநாதன் தலைமையில், புயல் பாதிப்பு நிலவரம், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்த தகவல்களை சேகரித்து, டி.ஜி.பி., திரிபாதி மற்றும் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ் தாஸ் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப் படுகிறது. பொது மக்கள், புயல் பாதிப்பு உள்ளிட்ட எவ்வித உதவிக்கும், 044 - 2434 3662, 044 - 2433 1074 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE