சென்னை:'புயல், மழை பேரிடரில் இருந்து, மக்களை பாதுகாக்க ஒன்றிணைவோம்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:
தி.மு.க., மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், துணை அமைப்புகளின் நிர்வாகிகளும், இந்த பேரிடர் நேரத்தில், மக்களுக்கு துணை இருக்க வேண்டும். பாதுகாப்பான இடங்களில் மக்களை தங்க வைப்பதற்கும், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்குவதற்கும் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அவசர மருத்துவ உதவிகளுக்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
புயல், மழை பாதிப்பு பகுதிகள் குறித்து, அரசு அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்து, அவர்கள் மேற்கொள்ளும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில், தேவையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.முன்னாள் எம்.பி.,யும், மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகனுமான எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திரகுமார், தி.மு.க.,வில் இணைந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE