பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் அதிக மழை நீர் வரத்து

Added : நவ 24, 2020
Share
Advertisement
சென்னை:மழை நீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 231 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன. ஏரிகள் மாவட்டமான காஞ்சிபுரத்தில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டம் புதிதாக உதயமாகி உள்ளது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த, 909 ஏரிகளில், 528 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்திற்குள் வந்துள்ளன. காஞ்சிபுரத்தில், 381 ஏரிகள் மட்டுமே

சென்னை:மழை நீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 231 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன.

ஏரிகள் மாவட்டமான காஞ்சிபுரத்தில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டம் புதிதாக உதயமாகி உள்ளது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த, 909 ஏரிகளில், 528 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்திற்குள் வந்துள்ளன. காஞ்சிபுரத்தில், 381 ஏரிகள் மட்டுமே உள்ளன.

வடகிழக்கு பருவ மழை காரணமாக, இந்த ஏரிகளுக்கு இம்மாத துவக்கத்தில் இருந்து நீர்வரத்து கிடைத்து வந்தது.இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 59 ஏரிகள் நிரம்பி வழிந்தன. அவற்றில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில், 75 ஏரிகள் நிரம்பின. மழை நின்றதால், ஒரு வாரமாக நீர்வரத்து கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் முதல் மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், இரண்டு மாவட்ட ஏரிகளுக்கும் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில், 100 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில், 131 ஏரிகளும் நிரம்பும் நிலையை எட்டியுள்ளன.

இம்மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நிரம்பும் போது, அவற்றின் கரைகளை உடைத்து, நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில், சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஏரிகளில் முழுமையாக நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்தாண்டு, அதுபோன்ற செயல்கள் நடக்காமல் தடுப்பதற்கான பணிகளில், பொதுப்பணித் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த ஏரிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, பொதுப்பணித் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X