சென்னை: சென்னை பல்கலையில் படித்து, கால அவகாசம் முடிந்த, 'அரியர்' மாணவர்கள், மேலும் மூன்று தேர்வுகளை எழுத, சலுகை வழங்கப்பட்டுள்ளது.
கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடிக்கும் மாணவர்கள், தங்களது அரியர் பாடங்களை, படிப்பை முடிப்பதில் இருந்து, இரண்டு ஆண்டுகளுக்குள் எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.இதன்படி, சென்னை பல்கலையில், உரிய கால அவகாசத்துக்குள், தேர்வை முடிக்காத மாணவர்களுக்கு, கூடுதல் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.
அதாவது, 2015 ஏப்ரலில் படிப்பில் சேர்ந்து, தற்போது அரியர் வைத்துள்ள மாணவர்கள், இந்த ஆண்டு டிசம்பர், அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பர் மாத செமஸ்டர்களில், தங்கள் அரியர் பாடங்களை எழுதி கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE