பொது செய்தி

தமிழ்நாடு

7 மாவட்டத்தில் 465 ஆம்புலன்சுகள்

Added : நவ 24, 2020
Share
Advertisement
சென்னை:'நிவர்' புயல் முன்னெச்சரிக்கையாக, ஏழு மாவட்டங்களில், 465 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. 108 கட்டுப்பாட்டு மையத்தில், அவசரகால செயல்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக் குறிப்பு:'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம் முழுதும், '108' அவசரகால சேவை கட்டுப்பாட்டு

சென்னை:'நிவர்' புயல் முன்னெச்சரிக்கையாக, ஏழு மாவட்டங்களில், 465 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. 108 கட்டுப்பாட்டு மையத்தில், அவசரகால செயல்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக் குறிப்பு:'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம் முழுதும், '108' அவசரகால சேவை கட்டுப்பாட்டு மையம் மற்றும், '104' மருத்துவ உதவி மையம், மக்களுக்கு உதவும் வகையில் தயார் நிலையில் உள்ளன. கடலோர மாவட்டங்களான புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், 465 அவரகால ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

அந்த வாகனங்களில் ஏற்படும் பழுதுகளை, உடனடியாக சரி செய்து இயக்குவதற்கு, மண்டல போக்குவரத்து பொறியாளர்கள், தயார் நிலையில், பகுதி வாரியாக பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். பலத்த காற்றில் மரங்கள் விழுந்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அனைத்து ஆம்புலன்சுகளிலும், எரிபொருள் முழுதும் நிரப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.

108 அவசரகால சேவை கட்டுப்பாட்டு மையத்திற்கு, அதிக அளவிலான அழைப்புகள் வர வாய்ப்பு உள்ளது.கூடுதல் பணியை எதிர்கொள்ளும் வகையில், மையத்தில் கூடுதலாக பணியாளர்கள் பணியில் இருக்கவும், அவர்களுக்கு தேவையான, உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்யவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புயல் காரணமாக, 108 அவசரகால கட்டப்பாட்டு சேவை மையத்தில், மின் துண்டிப்பை சமாளிக்கும் வகையில், 2,000 லிட்டர் எரிபொருளுடன், இரண்டு ஜெனரேட்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன. அவசரகால சேவை, காவல் கட்டுப்பாட்டு அறை, தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு மையங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள், அவசரகால செயல்பாட்டு மைய எண்களான, 044 -- 2888 8105, 73388 95011 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு, தேவையான ஆலோசனை பெறலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X