சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேசிய அளவிலான விளையாட்டில்வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை

Added : நவ 24, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று விளையாட்டு வீரர்கள் தேசிய போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தேசியஅளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 64வது தேசிய பள்ளி விளையாட்டு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று விளையாட்டு வீரர்கள் தேசிய போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தேசியஅளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 64வது தேசிய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய விளையாட்டு போட்டியில்தமிழகம் சார்பாக பங்கேற்று 14வயது பிரிவில் கேரம் போட்டியில் எ.எஸ்.தாமோதரன், குண்டுஎறிதலில் போட்டியில் வென்ற வி.மதுமிதா ஆகியோர் தங்கம் வென்றனர்.

இவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், 17 வயதுப்பிரிவு குண்டு எறிதல் போட்டியில் வெண்கலம் வென்ற ம.சர்மிளாவிக்கு ரூ. 1 லட்சம் ஊக்கத்தொகையை மாவட்டக் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.மாவட்ட விளையாட்டு, அலுவலர் செந்தில்குமார்உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X