திருவாடானை : திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் பக்தர்கள் நீராட முடியவில்லை.
இக் கோயிலில் வெள்ளி, செவ்வாய் நாட்களிலும் சித்திரை, ஆடி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.இரவில் தங்கியிருந்து மறுநாள் சுவாமி தரிசனம் செய்வது சிறப்பு என்பதால் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கோயில் முன்புள்ள மண்டபத்தில் தங்கி அதிகாலையில் குளத்தில் நீராடுவார்கள்.சில தினங்களாக ஏராளமான மீன்கள் செத்து மிதக்கிறது. துர்நாற்றமாக இருப்பதால் பக்தர்கள் கவலையடைந்தனர்.
இது குறித்து புதுக்கோட்டை லட்சுமி கூறியதாவது: குளத்தில் குளிக்கும் போது துர்நாற்றமாக உள்ளது. குறைந்த அளவு தண்ணீர் தேங்கியிருப்பதால் கலங்கியுள்ளது. மீன்களை அப்புறப்படுத்தி தண்ணீரை சுத்தபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE